Saturday, July 19, 2014

போலீஸ் ப்ளெக்ஸ் - மறைக்கப்பட்ட விளம்பரம்

காவல்துறை மண்டல விளையாட்டுப் போட்டிகளுக்கான ப்ளெக்ஸ் விளம்ப்ர போர்டுகள் பற்றி நேற்று எழுதியிருந்தேன். இன்று அவற்றை உன்னிப்பாக கவனித்ததில் இன்னொரு உண்மையும் தெரிந்தது.

போர்டுகளின் கீழே ஒரு அடி உயரத்திற்கு வெள்ளை ப்ளெக்ஸ் ஸ்கின் கொண்டு ஒட்டி அச்சிட்ட எதையோ மறைத்திருந்தார்கள். எல்லா போர்டுகளிலும் ஏதோ ஒன்று மறைக்கப்பட்டிருந்தது.

அனேகமாக இந்த விளம்பரங்களை வைப்பதற்காக ஸ்பான்சர் வாங்கியிருந்த வணிக நிறுவனங்களின் விளம்பரங்களாக இருக்கலாம். பிறகு எத்ற்கு வணிக நிறுவனங்களின் விளம்பரம் என்று யாராவது சொல்லி மறைத்திருக்கலாம். 

அரசு நிறுவனங்கள் தங்கள் விழாக்களுக்கு ஸ்பான்சர்  வாங்குவது என்பது ஒரு மோசமான செயல். பள்ளிக் கல்வித்துறை தங்களின் பல செலவுகளை தனியார் பள்ளிகளின் தலையில் கட்டி விடுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படி ஸ்பான்சர் வாங்கும் போது ஏதேனும் பிரச்சினை வந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில் தாட்சண்யம் பார்க்கும் நிலையும் வரும்.

இந்த விஷயத்தில் ஸ்பான்சரும் செய்து கடைசியில் விளம்பரமும் வராத நிறுவனங்கள்தான் பாவம். 

இல்லை காவல்துறை பணத்தை திரும்பக் கொடுத்திருக்குமோ?

1 comment:

  1. ஸ்பான்சரும் செய்து கடைசியில் விளம்பரமும் வராத நிறுவனங்கள்தான் பாவம்தான்

    ReplyDelete