Tuesday, July 29, 2014

ரயில் சீட்டிற்கு அடியில் ஒரு அனாமதேயப் பெட்டி - பதட்டமான அந்த நொடி

இரண்டு நாட்கள் கோவை அருகில் ஒரு தொழிற்சங்க வகுப்பில் கலந்து கொண்டு இரவு வேலூர் திரும்ப  சேரன் எக்ஸ்பிரஸில்  ஏறுகிறோம். அந்தப் பெட்டியில் நாங்கள்தான் முதலில் ஏறுகிறோம்.  

1 முதல்  6 வரை அனைத்து சீட்டுகளும் எங்களுடையதுதான். எங்கள் பைகளை சீட்டிற்கு அடியில் வைக்க குனிந்தால் அங்கே அதற்கு முன்பே ஒரு கனமான பெட்டி அனாமதேயமாக  கிடந்தது.க்ரிச், க்ரிச் என்று சப்தம் வேறு வந்தது. அதை வெளியில் எடுக்க நினைத்தால்  சீட்டோடு கட்டி வைக்கப் பட்டிருந்தது.

மின்சார இணைப்பு அளிக்கப்படாத அந்த நிமிடத்தில் அந்த பெட்டியில் என்ன இருக்குமோ என்று ஒரு நிமிடம் அனைவருக்குமே பதட்டம்  வந்து விட்டது. யாரோ வெடிகுண்டு வைத்து விட்டு போயிருக்கிறார்களோ என்று தான் உடனடியாக தோன்றியது.

கடைசியில் மொபைலின் வெளிச்சத்தில் பார்க்கும் போது சிரிப்பு  வந்து விட்டது.

அந்த அனாமதேயப் பெட்டி, எலிகளைப் பிடிப்பதற்காக ரயில்வே  வைத்திருந்த எலிப்பொறி. அந்த சப்தம் ஏற்கனவே சிக்கியிருந்த எலியார் உருவாக்கிக் கொண்டிருந்த உயிருக்கான வேண்டுகோள்.

வெடிகுண்டு என ஒரு நிமிடம் நாங்கள் கருதிய அந்த அனாமதேயப் பெட்டி இதுதான். 

 

3 comments:

  1. பொறியில் சிக்கியது, கேமராவில் சிக்க வில்லை.

    ReplyDelete
  2. "Adhu"-"An Invisible Eli" -nu sub title pottu short film yedukkalam!!

    ReplyDelete