Saturday, August 27, 2011

அர்த்தமற்ற சர்ச்சைகளில் நேரத்தை விரயமாக்கும் ஜெயலலிதா



முகமது பின் துக்ளக்  ஆட்சிக்காலத்தில்  வாழும்  உணர்வை
ஜெயலலிதா  அவ்வப்போது  உருவாக்கிக் கொண்டுள்ளார்.

கலைஞர் ஆட்சிக்கால முடிவுகளை எல்லாம்  மாற்றிக் கொண்டே
இருப்பது அவரது வாடிக்கையாகி விட்டது.

தமிழ் வருடம் மீண்டும்  சித்திரை  முதல் நாள்  என்ற  மாற்றம்
அவசியமற்றது. பண்டிகைகள் கொண்டாடுவது அவரவர் விருப்பம்.
அவரவர்களுக்கு  உள்ள வசதி, மரபு  இவற்றைப் பொருத்தது.
பண்டிகை கொண்டாடு அல்லது  கொண்டாதே  என்று  அரசு
உத்தரவு போட்டு  அமுலாக்குகின்ற விஷயங்களா  என்ன?

சித்திரை முதல் நாளன்று வருடப்பிறப்பு கொண்டாடியவர்கள்
கலைஞர்  உத்தரவு போட்டதும்  உடனே  தை முதல் நாளன்று
மாறி விட்டார்களா? அல்லது தை முதல் நாளன்று
கொண்டாடியவர்கள்  இனிமேல் சித்திரை முதல் நாளன்று
கொண்டாடப் போகின்றார்களா?

அரசு  உத்தரவிற்கு மாறாக வேறு தினத்தில்  கொண்டாடினால்
அரசால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?

உருப்படியான விஷ்யங்களை விட்டு  அர்த்தமற்ற
சர்ச்சைகளில் நேரத்தை  விரயமாக்க  தமிழகத்தினுடைய
அரசியல்வாதிகளால்  மட்டுமே  முடியும்.

ஜெயலலிதா கலைஞர்  ஆட்சிக்காலத்தை  விட்டு  வெளியேறி
தனது ஆட்சியை நடத்தட்டும்.

2 comments:

  1. பார்ப்பனீயத் திமிர் காண்பிக்கப் படுகின்றது. சமச்சீர் கல்வி ஆராய அமைக்கப் பட்டக் குழுவில் அர்த்தமில்லாத பார்ப்பனர்கள். அசிங்கப் பட்டது தான் மிச்சம்.
    500 தமிழறிஞர்களை விட அக்கிரகாரத்து 60 ஆண்டுகள் அசிங்கக் கதைதான் புத்தாண்டா ?
    தமிழன் செய்த தவறுகளுக்காகப் பார்ப்பனீயத்திற்கு வாக்களித்தவர்கள் படப் போகும் பாடுகள் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லப் போகின்றது, ராகு காலம் முதல், ராங்கிப் போக்கு வரை.

    ReplyDelete
  2. சித்திரை முதல் நாளன்று வருடப்பிறப்பு கொண்டாடியவர்கள்
    கலைஞர் உத்தரவு போட்டதும் உடனே தை முதல் நாளன்று
    மாறி விட்டார்களா? அல்லது தை முதல் நாளன்று
    கொண்டாடியவர்கள் இனிமேல் சித்திரை முதல் நாளன்று
    கொண்டாடப் போகின்றார்களா?
    அருமையான பதிவு.
    மக்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனதை செலுத்த வேண்டும். வீணாய் கைதட்டலுக்கு அரசை நடத்தக் கூடாது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete