நீதிபதியாக தகுதி பெறாத வழக்கறிஞர்கள்
சில தினங்கள் முன்பு நாளிதழில் படித்த செய்தி இது.
கர்நாடக மாநிலத்தில் மாவட்ட நீதிபதி பதவிக்காக
நடைபெற்ற எழுத்து தேர்வில் பங்கேற்ற 518
வழக்கறிஞர்களில் ஒருவர் மட்டுமே தேர்ச்சி
பெற்றுள்ளார். மற்ற அனைவரும் தோல்வி
அடைந்துள்ளனர்.
சிவில் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம்
ஆகிய இரு பிரிவுகளில் ஒவ்வொன்றிலும்
ஐம்பது மதிப்பெண் எடுக்க வேண்டும். சிவில்
சட்டத்தில் எட்டு பேர் ஐம்பது மதிப்பெண்
பெற்றுள்ளனர். ஆனால் ஒருவர் மட்டுமே
குற்றவியல் சட்டத்தில் ஐம்பது மதிப்பெண்
.பெற்றுள்ளார்
ஏழு ஆண்டுகள் பணி செய்தவர்கள் மட்டுமே
.விண்ணப்பிக்க முடியும் என்பது அதிர்ச்சி செய்தி
வழக்கறிஞர் தொழில் செய்பவர்கள் சட்டங்களை
முறையாக மனதில் கொள்ளவில்லை என்பதையே
இது காண்பிக்கிறது.
அல்லது சிறப்பான வழக்கறிஞர்களை நீதிபதி
பதவி ஈர்க்கவில்லை. இது எதுவுமே
நீதிததுறைக்கோ அல்லது வழக்கு பதிவு
செய்தவர்களுக்கோ நல்லதில்லை.
ஆக இவர்களை நம்பி யாரும் கொலை செய்யக்கூடாது.
No comments:
Post a Comment