ஒரு வழியாக கர்னாடகத்திற்கு புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.தமிழகத்திற்கு எதிரான உணர்வுகளை ஹொகனேக்கல் பரிசல் பயணம் மூலம் தூண்டி விட்டு முதலமைச்சர் நாற்காலியை பிடித்த நாள் முதலே யெடியூரப்பாவின் ஆட்சிக்காலம் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள், உள்கட்சி மோதல்களால் அந்த நாற்காலி தடுமாறிக் கொண்டே இருந்தது.
சுரங்க ஒதுக்கீடுகளில் முறைகேடு நடந்துள்ளது என லோக் ஆயுக்தா அளித்தஅறிக்கையின் அடிப்படையில் பாஜக மேலிடம் உத்தரவிட வேறு வழியின்றிமுதல்வர் யெடியூரப்பா பதவி விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கடுமையான இழுபறிக்குப் பின்பு ரகசிய வாக்கெடுப்பு நடத்தி சதானந்த கௌடா புதிய முதல்வராக பொறுப்பேற்கப் போகின்றார்.
அவரது நிலை உண்மையிலேயே பரிதாபமானது. வெறும் 14 கூடுதல் வாக்குகள் மூலமே அவர் எதிர் கோஷ்டி வேட்பாளரை விட பெற்று நாற்காலியை அடைந்துள்ளார். சுரங்க மாபியா உரிமையாளர்களை பகைத்துக் கொண்டால் அவருக்கு கிடைத்த ஆதரவு கற்பூரமாய் காற்றில் மறைந்து விடும்.
யெடியூரப்பா தனக்கான தலையாட்டி பொம்மையாகத்தான் சதானந்த கௌடாவை முதல்வராக்கியுள்ளார். எனவே யெடியூரப்பா மீது வழக்கு தொடுக்க ஆளுனர் அனுமதி கொடுத்துள்ள நிலையில் அந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்திட வேண்டும். இல்லையென்றால் அவர் கோபித்துக் கொள்வார்.
எதிர்கோஷ்டிகளும் எதிர்க்கட்சிகளும் காலை வாருவதற்கான சரியானவாய்ப்பை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இந்தப் பின்னணியில் கர்னாடக மாநில புதிய முதல்வர் உண்மையிலேயே பரிதாபமானவர்தான்.
இவரது நிலையே இப்படியென்றால் கர்னாடக மக்களின் நிலை,
மிக மிக பரிதாபம்.
பின் குறிப்பு
இந்தப் படமே அவரது நிலையை சொல்கிறதல்லவா!
No comments:
Post a Comment