Sunday, August 7, 2011

இம்சை முதல்வர் மூன்றாம் ரங்கசாமி





வெள்ளிக் கிழமையன்று  எங்கள்  புதுவைக் 
கிளையின் ஆண்டுபேரவைக் கூட்டத்திற்காக 
புதுச்சேரி  போயிருந்தேன்.  முதல் நாள் 
புதுவை முதல்வர் ரங்கசாமியின்  பிறந்த 
நாள் கொண்டாட்டம்  வெகு வெகு வெகு 
விமரிசையாக  நடந்திருந்தது  என்பது 
நகர்  முழுதும்  வைக்கப்பட்ட  விளம்பர 
பேனர்கள்  மூலம்  உணர முடிந்தது. 


புலிகேசி படத்தில்  ராஜாதி ராஜ, 
ராஜ குல திலக என துதி பாடுவது 
போல  எத்தனை  துதிகள்  தெரியுமா? 


மக்கள் தலைவா
மக்கள் முதல்வா
சின்ன காமராசரே
வாழும் காமராசரே,
புதுவை காமராசரே,
நிரந்தர முதல்வரே,
எங்கள் ஐயா,
எங்கள் ஐயனே
எங்கள் குல சாமி
ஆண்டவனே, ஆள்பவனே
எங்கள் தெய்வமே,
மாணிக்கமே,
தல யே
தளபதியே
தங்கப் புதல்வனே,
த்வப்புதல்வனே,
இமயமே,
உழைப்பின்  ஓவியமே,
அறுசுவையே.
சிங்கமே,
எங்கள் சாமியே,
வசந்த காலமே,
கர்ம வீரரே,
கருணை உள்ளமே
புதுவையே
புதுவையின் முகவரியே



எனது நினைவிற்கு வந்தது இவ்வளவுதான்.
நான் பார்த்ததை விட பார்க்காமல் விட்டதுதான்
அதிகம்தான்  என தோழர்கள் சொன்னார்கள். 


இந்த பேனர்களில் வித்தியாசமான 
கெட் அப் கள வேறு.  


கராத்தே  உடையிலும்  சிக்ஸ் பேக் 
கம்பீர உடலோடும்  இருந்ததுதான்  
எனக்கு பிடித்திருந்தது. 


அவரது அம்மாவிற்கு  வேறு  தனி 
போஸ்டர்கள்.  மாணிக்கத்தை  
பெற்றெடுத்த மரகதத் தாய். . . 


முதல் நாள் இரவு நகர் வலம்  வந்து
அனைத்து பேனர்களையும்  பார்த்தாராம்.
அவர் எந்தெந்த  பேனர்களை எல்லாம்
மிகவும்  ரசித்தார்  என்ற தகவலை 
அவரது ஓட்டுனர் சம்பத்தப்பட்ட 
ஆட்களுக்கு  தொலைபேசியில்  வேறு 
தகவல்  சொன்னாராம். 


நானும் கூட  ஒரு வித்தியாச 
கெட் அப்,   மூன்றாவது முறையாக 
முதல்வரான  ரங்கசாமி அவர்களுக்கு
தயாரித்துள்ளேன். 


நன்றாக உள்ளதா என சொல்லுங்கள் ....   
   

No comments:

Post a Comment