Friday, August 19, 2011

தமிழில் இதற்கு என்ன அர்த்தம்? யாரால் சொல்ல முடியும்?



நேற்று  ஒரு தோழரின்  இறுதிச் சடங்கில்  பங்கேற்க 
திருப்பத்தூர் சென்றிருந்தேன்.  அப்போது  கண்ணில் 
பட்ட விளம்பரம் இது. 


விஜயகாந்தின் பிறந்த நாளுக்காக  அவரது கட்சி 
ஆட்கள் வைத்திருந்த பிரம்மாண்ட விளம்பர 
பதாகையின்  வாசகம் கீழே கொடுத்துள்ளேன்.
" தமிழகத்தின் 
திண்டாமைத் தலைவா! " 


 நானும் யோசித்து யோசித்து
பார்த்து விட்டேன்,  பலரையும்  
கேட்டு விட்டேன்


யாருக்கும்  தெரியவில்லை.
தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்.

6 comments:

  1. தெண்ட ஆமையோ.. அப்படியும் இருக்கலாம்..
    எதற்கும் தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில்
    கேளுங்க தோழா..

    ReplyDelete
  2. அட இதுதானா விஷயம்.

    திண் - rigid - கடுமையான - விட்டுக்கொடுக்காத

    திண்டாமை - விட்டுக்கொடுக்காத தன்மை இல்லாமை - விட்டுக்கொடுக்கும் தன்மையுள்ள

    அட கொள்கையையே விட்டுக்கொடுத்தவருக்கு, இந்த பட்டம் கூட இல்லைன்னா எப்படி? குஞ்சுகள் சரியாத்தான் சொல்லியிருக்காங்க!

    - முருகன் கண்ணன்

    ReplyDelete
  3. சிறப்பாக இருக்கிறது.தங்கள் கருத்துக்கள் தொடரட்டும்.

    ReplyDelete