Thursday, January 3, 2019

மரணத்தின் வரலாறு மறந்த காவி பிராந்தன்கள்


காவி பிராந்தன்களும்  சாகசப் போராளிகளும் உணரட்டும்பிந்துவும் கனகதுர்காவும் சபரிமலைக்குச் சென்று வழிபட்டு வந்த பின்னணியில் சில விஷயங்களை உரக்கப் பேசிட வேண்டும்.

வனிதா மதில் பற்றியும் கூட.

கேரளத்தின் மார்க்சிஸ்ட் அரசு ஒரு கையாலாகாத அரசு என்று இத்தனை நாள் தூற்றி வந்த பல முக நூல் புரட்சியாளர்கள், தனி நகர் சாகச முயற்சிகளையே புரட்சி என்று பீற்றிக் கொண்டிருந்தவர்களால் லட்சக் கணக்கான பெண்களை திரட்டி பெண் சுவர் அமைத்ததை என்னமோ ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

அதே போல வனிதா மதிலுக்கு இஸ்லாமியப் பெண்களை ஏன் ஈடுபடுத்தினர் என்ற முதலைக் கண்ணீர் வடிப்பதையும் பார்க்க முடிகிறது.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு செல்வதை பெண்களே விரும்பவில்லை என்ற கட்டுக்கதை தகர்க்கப்பட்டதை காவிக் கயவர்களால் இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சபரிமலை விஷயத்தில் “பெண்களை கோயிலுக்கு அழைத்துச் செல்ல திரட்டுவது தன்னுடைய வேலை இல்லை” என்பதில் கேரள அரசும் மார்க்சிஸ்ட் கட்சியும் தெளிவாக இருந்தது.

அதே நேரம் கோயிலுக்குச் செல்ல விரும்பும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது மட்டுமே அரசின் வேலை என்ற அளவில் மட்டுமே பிரச்சினையைக் கையாண்டது. பராசக்தி வசனம் போல சபரிமலை கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறி விட்ட பின்னணியில் பெரும் கலவரம் வெடிக்கவோ, ரத்த ஆறு ஓடவோ அவர்கள் அனுமதிக்கவில்லை.

அதே நேரம் சபரிமலை விஷயத்தை முன்வைத்து கேரள மாநில சிந்தனையோட்டத்தை பின்னிழுத்துச் செல்லவோ, பிற்போக்குக் கருத்துக்களை பரப்பவோ, பெண்களை இழிவுபடுத்தவோ அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில்தான்

வனிதா மதிலுக்கு திட்டமிடப்பட்டது.

நாங்கள் அசுத்தமானவர்கள் அல்ல
கேரளத்தை பைத்தியக்கார நாடாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்

என்ற முழக்கங்களோடு பத்து லட்சம் பெண்களை திரட்ட முடிவு செய்யப்பட்டது.

இம்முழக்கங்களின் நியாயத்தை உணர்ந்ததால்தான் அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எடுத்த முன்முயற்சிக்கு கிட்டத்தட்ட 176 அமைப்புக்கள் ஆதரவளித்தனர். அதிலே இஸ்லாமியப் பெண் அமைப்புக்களும் அடக்கம்.

ஐம்பது லட்சம் பெண்களில் ஏழை செல்வந்தர் பாகுபாடு கிடையாது, படித்தவர் -படிக்காதவர் பாகுபாடு கிடையாது, அலுவலக வேலை செய்பவர் - கூலி வேலை செய்பவர் பாகுபாடு கிடையாது, ஜாதிய வேறுபாடுகளும் கிடையாது, மத வேறுபாடுகளும் கிடையாது. கேரளத்தை மீண்டும் பைத்தியக்கார நாடாக பின்னோக்கி இழுத்துச் செல்லாதே, பெண்களை அசுத்தமானவள் என்று சொல்லாதே ஆகியவைதான் வனிதா மதிலின் முழக்கம். இதிலே இஸ்லாமியப் பெண்கள் கலந்து கொண்டது மட்டும் தெரிந்தால் அது பார்வைக் கோளாறு. சபரிமலைப் பிரச்சினையே பார்வைக் கோளாறின் விளைவுதான். குடிகாரனும் பாலியல் குற்றவாளியும் செல்வதனால் கறைபடாத புனிதம் பெண்கள் சென்றால் ஏற்படும் என்ற பார்வைக் கோளாறு

இதர பகுதி பெண்களைப் பற்றி மௌனமாக இருந்து விட்டு இஸ்லாமியப் பெண்களைப் பற்றி மட்டும் குறிப்பிடுவது விஷமத்தனமானது, விஷமானது.

சங்கிகளும் சரி மற்ற புரட்சி பேசுபவர்களும் சரி ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.

வனிதா மதிலுக்காக முப்பது லட்சம் பெண்களை திரட்டும் வல்லமை படைத்தவர்கள் முயன்றிருந்தால் அதிலே பத்தில் ஒரு பகுதி பெண்களோடு சபரிமலை நோக்கி முன்னேறியிருக்க முடியாதா?

மூன்று லட்சம் பெண்கள் அல்ல முப்பதாயிரம் பெண்கள் சேன்றிருந்தாலே காவிக்கயவர்கள் நடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்திருப்பார்கள்.

பிணராயி விஜயன் மோடியைப் போலவோ அல்லது மொட்டைச் சாமியார் போலவோ பொறுப்பற்ற முதல்வர் அல்ல. மதத்தின் பெயரால் அரசியல் நடத்தும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியும் அல்ல.

இப்போது தலைப்பிற்கு வருகிறேன்.

கதறும் சங்கிகள் "பிணராயி விஜயன் பிணமாவார்' என்று சாபம் இடத் தொடங்கியுள்ளனர். 

அவர்கள் ஒரு வரலாற்றுத் தகவலை நினைவு படுத்திக் கொள்ளட்டும்.

வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட தந்தை பெரியார் இறந்து போக வேண்டும் என்று திருவிதாங்கூர் மகாராஜா "சத்ரு சம்ஹார ஹோமம்" நடத்துகிறார். இதிலென்ன பரிதாபம் என்னவென்றால் ஹோமம் நடந்த சில நாட்களில் திருவிதாங்கூர் மகாராஜா இறந்து போக, அதற்கடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பெரியாரின் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்தது.

ஒவ்வொரு முறை கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட போதும் அவர் கதை முடிந்தது என்று அதிமுக தொண்டர்கள் பேசி மகிழ்ந்தார்கள். ஆனால் அவரது இறுதி நாள் வரும் முன்பே அவர்களின் தலைவிதான் இறந்து போனார், அவரது மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது.

அடுத்தவரின் மரணத்திற்காக ஆசைப்படுபவர்களையே மரணம் ஆசையோடு தழுவிக் கொள்கிறது என்ற வரலாற்றை காவிப் பிராந்தன்கள் நினைவில் கொள்ளட்டும்.
9 comments:

 1. Rishabraj RajendraJanuary 3, 2019 at 2:31 PM

  லட்சக்கணக்கு என்பது சந்தேகமாக இருக்கின்றது
  ஆதாரம் படம் தருகின்றேன்

  முழுமையான மனித சங்கிலி இல்லை

  https://www.facebook.com/Rishabraj2020/posts/285282802345571

  ReplyDelete
  Replies
  1. முதலாளித்துவ ஊடகங்களாலேயே மறுக்க முடியாத உண்மை. நிகழ்வு தொடங்கும் முன்பான படங்களை வைத்து சங்கிகள் செய்ய நினைத்த படங்களை நம்புவதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? அப்படியே திருப்தி அடைந்து கொள்ளுங்கள்

   Delete
 2. Rishabraj RajendraJanuary 3, 2019 at 2:36 PM

  முற்போக்கு முஸ்லீம் பெண்கள் பெண்ணுரிமைக்காக போராடுவது தப்பேயில்லை
  அடலீஸ்ட் இஸ்லாமில் உள்ள பெண்ணடிமைத்தனங்களை எதிர்த்து குரல் கொடுத்த பெண்களாக இருந்திருக்கலாம்
  ஆனால்

  கலந்து கொண்ட பெண்கள்
  உலகிலேயே மோசமான பெண்ணடிமைத்தனமான புர்க்கா அணிந்த இஸ்லாமிய பெண்கள் , இந்து பெண்களின் பெண்ணுரிமைக்காக போராடுகின்றார்கள் என்று சொன்னால் எவ்வளவு கேவலமான அபத்தம்

  கேரளாவில் எங்குமே இஸ்லாமிய பெண்கள் பள்ளிவாசல் செல்ல அனுமதி இல்லை

  ReplyDelete
  Replies
  1. வனிதா மதிலின் முழக்கங்களை அறியாத பார்வை

   Delete
  2. ஐயா, இங்கே முஸ்லீம் பெண்கள் பற்றி Rishabraj Rajendra சொல்லியிருப்பது முற்றிலும் சரியானது. அவர்கள் உடலை முழுவதுமாக மூடி ஆடை அணிவதற்கும் பள்ளிவாசல் செல்ல அனுமதி இல்லாததற்கும் காரணம் ஆண்கள் இவர்களை பார்த்து சபல பட்டுவிட கூடாது என்பதற்காகத்தான். இதை தான் அய்யப்ப பக்தர்களும் சொல்கிறார்கள். எனக்கு இஸ்லாம் பற்றி ஓரளவு நன்றாகவே தெரியும், அதனால் இதை உறுதியாக சொல்கிறேன்.
   நீங்கள் நேர்மையான மனிதர், ஒருவர் சரியான கருத்தை சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ள தயக்கம் வேண்டாமே!

   Delete
 3. Rishabraj RajendraJanuary 3, 2019 at 2:36 PM

  முக்கிய குறிப்பு
  நான் இந்து அல்ல

  ஜைன மதத்தை சேர்ந்தவன்
  ( தமிழ் ஜைனம் .. மார்வாடி அல்ல )

  ReplyDelete
  Replies
  1. SO What? it is not relevant to me or I am not converned

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
 4. // “பெண்களை கோயிலுக்கு அழைத்துச் செல்ல திரட்டுவது தன்னுடைய வேலை இல்லை” என்பதில் கேரள அரசும் மார்க்சிஸ்ட் கட்சியும் தெளிவாக இருந்தது.
  அதே நேரம் கோயிலுக்குச் செல்ல விரும்பும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது மட்டுமே அரசின் வேலை என்ற அளவில் மட்டுமே பிரச்சினையைக் கையாண்டது.//

  மிக தெளிவான சிந்தனை, இவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.

  ReplyDelete