Thursday, October 25, 2018

மனசாட்சியுடன் ஒரு மன்னிப்பு - நதியிடத்தில் . . .




எங்களின் நெல்லைக் கோட்டப் பொதுச்செயலாளர் தோழர் பி,முத்துக்குமாரசாமி அவர்களின் முக நூல் பதிவு அருமையாக இருந்தது. அதனை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



தாமிரபரணி புஷ்கரம் முடிந்து வழக்கம் போல்(?) ஓடிக்கொண்டு இருக்கிறது நதி. நேற்று என் கனவில் வந்தாள் தாமிரபரணி. நதியோடு 40 ஆண்டுகளாய் உயிரோட்டமான தொடர்பு உண்டு எனக்கு. அது மட்டுமல்ல அவள் மீது சமூகம் வன்முறை நிகழ்த்திய போது (கோக் கம்பெனிக்கு தண்ணீர் கொடுக்க முயன்ற போது, அவளது இதயத்தை குத்தி கிழித்து மணலை கொள்ளையடித்தபோது, அவள் மீது அசுத்தங்களை கலந்த போது...) எதிர்ப்பு இயக்கங்களில் பங்கேற்றவன் எனும் நெருக்கத்தில் கனவில் வந்திருக்கலாம். அவள் கேட்டதில் இருந்து....

* நான் கதற கதற மணல் எடுக்காமல் இனியாவது இருப்பீர்களா....?

* என்னை அயல் நாட்டு கம்பெனிகளுக்கு விற்காமல் இருப்பீர்களா...?

* தொடர்ந்து மக்களை வஞ்சிப்பவனும் சமூக விரோதிகளும் வந்து குளிக்கும் போது அருவருப்பாய் உணர்ந்தேன். ஒரு நாளுக்கே எனக்கு இப்படி என்றால் காலம் முழுவதும் எப்படி அவர்களை சகித்து வாழுகிறீர்கள்? குறைந்தபட்சம் கோபம் கூட உங்களிடம் இல்லையே!....

* சிறுவன் விக்னேஷ் உள்ளிட்ட 13 பேர்களை கொலை செய்தவர்களின் பாவம் புஷ்கரணியில் போய்விட்ட்தா?

கடைசியில் எனக்கும் குறிப்பிட்டவர்களுக்கான சாயத்தை பூசிட்டீங்களேடா......

கனவு கலைந்து விட்டது. மழை நேரமானாலும் உண்மை சூட்டெரிக்கிறது. அவளை பார்த்து மன்னிப்பு கேட்க கிளம்பினேன்.

1 comment:

  1. தொடர்ந்து மக்களை வஞ்சிப்பவனும் சமூக விரோதிகளும் வந்து குளிக்கும் போது அருவருப்பாய் உணர்ந்தேன். ஒரு நாளுக்கே எனக்கு இப்படி என்றால் காலம் முழுவதும் எப்படி அவர்களை சகித்து வாழுகிறீர்கள்? குறைந்தபட்சம் கோபம் கூட உங்களிடம் இல்லையே!....அருமையான பத்தி.. ஆனால் நடைமுறையில் அப்படி கோபம் படுகிறவர்களை தனிமைபடுத்தும் நேர்மையற்ற செயல்தான் வெற்றி பெறுகிறது.

    ReplyDelete