Monday, October 15, 2018

மோடி, அமித்திற்கும் தண்டனை கிடைக்குமா?



இன்றைய ஹிந்து நாளிதழின் தலைப்புச் செய்தி 

"அஸ்ஸாமில் போலி எண்கவுண்டர் நடத்தியதற்காக ஒரு மேஜர் ஜெனரல் உட்பட ஏழு ராணுவ அதிகாரிகளுக்கு ராணுவ கோர்ட் இருபத்தி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை கொடுத்துள்ளது." 

என்று கூறியது.

சரிந்து வரும் செல்வாக்கை மீட்டெடுக்க

சொஹாராபுதின் ஷேக்,
இஷ்ரத் ஜஹான்,
துளசி பிரஜாபதி

என்று மூன்று போலி எண்கவுண்டர்களை நடத்தி ரத்த நாற்றத்தில் இன்று பிரதமராகவும் பாஜக அகில இந்தியத் தலைவராகவும் உள்ள மோடி மீதும் அமித் ஷா மீதும் சட்டம் பாயுமா?

அவர்களுக்கும் தண்டனை கிடைக்குமா?

அமித் ஷாவை விடுதலை செய்தவர்  மாநில ஆளுனராக,
விடுதலைக்காக வாதாடியவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக,
நற்சான்றிதழ் அளித்தவர் வெளிநாட்டு தூதராக,

சொகுசாக வாழும் நாட்டில்

வழக்கை விசாரித்த ஒரு கீழமை நீதிமன்ற நீதிபதி கோடிக்கணக்கான ரூபாய் கையூட்டை மறுக்க, அன்றே அவர் மர்மமாய் இறந்து போக, அந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று தீர்ப்பளித்த நீதியரசர்

அடுத்த பதவிக்காக காத்திருக்க

நீதிமன்றமாவது ஹெச்.ராஜா சொன்னதாவது 

என்று நாம் சொன்னால் 

நம் மீது மட்டும் பாயும் சட்டம் . . .




No comments:

Post a Comment