Saturday, October 27, 2018

ஒரு முட்டாளின் மிரட்டல் . . .


Metoo சபாஷ் மியூசிக் அகாடெமி என்று இரண்டு நாட்கள் முன்பாக எழுதிய பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டத்தை கீழே தந்துள்ளேன்.

ன்னா காம்ரேட், ஒங்களுக்கு விசயம் புரியலயா! இல்ல, புரியாதமாதிரி நடிக்கிறீர்களா! உதாரணத்துக்கு ஒரு அழகான சங்கி-மங்கி சகோதரி உங்கள்மேல் பாலியல் குற்றச்சாட்டு சொன்னால் அதை மவுனமாக எற்றுக்கொண்டு LIC சங்க பணியிலிருந்து விலகிவிடுவீர்களா. (LIC ஊழியர் பணியிலிருந்து விலகி விடுமாறு கோருவது அராஜகம்!).

என்னோட LIC policy claimல பிரச்சனை இருந்தது அதை clear பண்ணுவதற்காக LIC ஊழியர் சங்கத்தலைவர், வேலூர் 'ராமனை' சந்திக்க சொன்னார்கள். அவர் அவசரமாக சங்க meetingகு கொல்கட்டா செலல விருப்பதாகவும் அங்கு வந்து சந்தித்தால் 'வேலையை' நல்லபடியாக முடித்துக்கொடுப்பதாகவும் வாக்களித்தார். ஆதன்படி அவரை கொல்கட்டா சென்று சந்தித்த பொழுது விக்டோரியா மாளிகை தோட்டத்தில் வைத்து என்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார் என்று ஒரு பெண் 'சீக்கிரமே' உங்கள் மேல் பாலியல் குற்றம் சாட்டலாம். Be ready, comrade!

உங்களுக்கு வருவது ரத்தமா! அல்லது தக்காளி சட்னியா!! என அறிய ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் தோழன்
ReplyDelete

இந்த பின்னூட்டத்திற்கு பதிலடி கொடுத்து விட்டேன்.


இதைப் படிக்கையில்  எனக்கு தோன்றிய சில உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

எங்கே தன் மீது Metoo வந்து விடுமோ என்ற அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் கடந்த கால குற்றவாளிகளுக்கு அந்த இயக்கத்தை ஆதரிக்கும் ஆண்கள் மீது எரிச்சல் வருவது இயல்பானதே. அப்படிப்பட்ட ஒரு பசுத்தோல் போர்த்திக் கொண்டு உலாவும் ஒரு ஓநாயின் பின்னூட்டமாகவே இதைக் கருதுகிறேன். அது மட்டுமல்லாமல் எனது தொழிற்சங்கப் பொறுப்பும் அந்த அனாமதேயத்திற்கு ஏனோ வெறுப்பை உருவாக்கியுள்ளது போல. அந்த ஆராய்ச்சிக்கெல்லாம் போக நான் விரும்பவில்லை. அந்த அளவிற்கு அது வொர்த் இல்லை. அது சங்கியின் பின்னூட்டமல்ல என்பது தெளிவு. 

உண்மையில் அந்த பின்னூட்டம் எனக்கு மிகப் பெரிய சிரிப்பையே அளித்தது. 

என் மீது யாரை வைத்தாவது புகார் அளிக்க வைப்பேன், அதை சந்திக்க தயாராக இரு என்று எச்சரிக்கிற அந்த அனாமதேயம் அதை இப்படியா பொது வெளியில் பதிவு செய்யும்!

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். சிலர் பிறவி முட்டாளாகவே இருக்கிறார்களே! 

இதை படிக்கிற போது இன்னொரு சம்பவமும் எனக்கு நினைவு வந்தது.

சில வருடங்களுக்கு முன்பாக ஒரு நல்லவன் "நான் நினைத்தால் அவரை சாட்சி இல்லாமலேயே கொலை செய்வேன்" என்று சில தோழர்களிடம் வெட்டி பந்தா செய்துள்ளான்.  அதான் எங்க கிட்ட சொல்லிட்டயே என்று அவர்கள் பதில் அளித்த போது அவ்வை சண்முகி மணிவண்ணன் போல அசடு வழிந்திருக்கிறான்.

இவர்கள் எல்லாம்  தங்களை தனி ஒருவன் அரவிந்த்சாமி போல பெரிய புத்திசாலி வில்லன் என்ற நினைப்பில் இருக்கிறார்கள். 

ஆனால் மேலே உள்ள காமெடி வில்லன்கள் அளவிற்குக் கூட வொர்த் இல்லாத முட்டாள்கள் என்பது ஏனோ அவர்களுக்கு புரிவதில்லை. 

பிகு:

கொல்கத்தா விக்டோரியா நினைவக தோட்டத்தை பின்னூட்டத்தில் கொண்டு வந்து மண்டை மீதுள்ள கொண்டையை மறைக்காத அந்த அனாமதேயத்திற்காக நான் அங்கே எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன். ஏதாவது போட்டோஷாப் செய்ய வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளட்டும். 






4 comments:

  1. குமர குருபரன்October 27, 2018 at 2:10 PM

    நான் metoo அறப்போரை முழுமையாக ஆதரிக்கின்றேன்
    நான் கடவுள் நம்பிக்கை உடையவன் . திராவிட வாதிகளின் பார்வையில் பத்தாம்பசலி
    ஆனால் பகுத்தறிவாளர் என்று சொல்லி கொள்ளும் திராவிட அமைப்பினர் மட்டும் இந்த அமைப்பை கேவலமாக வசை பாடி வருகின்றார்கள்

    பகுத்தறிவுக்கான இலக்கணத்தை மாற்றி அமைக்க வேண்டும்

    ReplyDelete
  2. ஹாஹா, நிஜமாகமே முட்டாள்கள்தான். இருந்தாலும்
    மனதில் விஷம் உள்ளது. அதனால் ஜாக்கிரதையாகவே இருங்கள்

    ReplyDelete
  3. இதெல்லாம் சும்மா குரைக்கிற நாய்கள்

    ReplyDelete
  4. அந்த அனாமதேயம் யார் என்று உங்களுக்கு தெரியும் என்பதை உங்கள் பதிவு சொல்லாமல் சொல்கிறது. அந்த நாயை ஏன் இன்னும் அம்பலப்படுத்தாமல் இருக்கிறீர்கள்? யார் என்று தெரிந்தால் நாங்களும் எச்சரிக்கையாக இருப்போமே.

    ReplyDelete