Monday, October 29, 2018

காவிகள் ஆஸ்ரமத்தை எரித்தது என்?




ஊடக விவாதங்களில் மடக்கியதால் ஆத்திரம்
சுவாமி சந்தீபானந்தகிரிக்கு குறி வைத்தது சங்பரிவார்

திருவனந்தபுரம், அக்.28-சுவாமி சந்தீபானந்தகிரி நீண்ட காலமாகவே சங்பரிவாரால் குறி வைக்க ப்பட்டவர். தொலைக்காட்சி விவாதங்களில் சபரிமலையில் பின்பற்றப்பட்டு வந்த மரபுகள் குறித்தும் சாஸ்த்திர சம்பிரதாயங்கள் குறித்தும் ஆதாரப்பூர்வமாக அவர் வாதிட்டது சங்பரிவார் அமைப்பினருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதே அவரது ஆஸ்ரமம் தீவைக்கப்பட்டதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சுவாமி சந்தீபானந்தகிரி தொலைக்காட்சி விவாதங்களில் ஆர்எஸ்எஸ் பேச்சாளர்களின் வாதங்களை தனக்கு இந்து தர்ம சாத்திரங்களில் இருந்த புலமையால் முனைமழுங்கச் செய்து வந்தார். சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என வாதிட்ட காங்கிரஸ் – பாஜக தலைவர்களுக்கும் அவர்க ளது சாதிய அரசியல் கூட்டாளிகளுக்கும் இந்து பிராமண கிரந்தங்கைக் கூறி பதிலடி கொடுத்து வந்தார். அண்மைக்காலமாக தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக தலைவர்கள் சுவாமியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வந்தனர். சந்தீபானந்தகிரியை தனிப்பட்ட முறையில் அச்சமூட்டவும் சங்பரிவார் பேச்சாளர்கள் முயன்றனர். 

மற்றவர்களின் வாதங்களை அமைதியாக கேட்ட பிறகு மெதுவாக தனது வாதங்களை முன்வைப்பார். அண்மையில் தொகுப்பாளரும் ராகுல் ஈஸ்வரின் மனைவியுமான தீபா பங்கேற்ற விவாதத்தில் சாஸ்தா – அய்யப்பன் குறித்த நம்பிக்கைகள் குறித்து சந்தீபானந்தகிரி விவரிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பெரிய அளவில் பகிரப்பட்டது. அய்யப்பனுக்கு பூர்ணா, புஷ்கலா என்கிற இரண்டு மனைவியர் இருந்ததாக ஒரு நம்பிக்கை உள்ளது. அதற்கு ஆதாரமாக இவர்களது பெயரில் திருவனந்தபுரத்தில் கோயில் உள்ளதையும் சந்தீபானந்தகிரிசுட்டிக்காட்டினார். ஐயப்பன் சாஸ்தாவில் ஐக்கிய மானதோடு அய்யப்பனும் சாஸ்தாவும் ஒன்றாகி விட்டார்கள் எனவும் சாஸ்தாவுக்கு பிரபா என்கிற மனைவியும் சத்யகன் என்கிற மகனும் உள்ளதாக சுவாமி கூறினார். 

காணிப்பையூரின் சாஸ்திர கல்பம் என்கிற இந்து ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விளக்கத்தை கூறினார். காணிப்பையூர் தனதுகிரந்தத்தில் அய்யப்பனுக்கு பதில் சாஸ்தா என்றே மூர்த்தியைக் குறிப்பிடுகிறார். சபரிமலையில் மூர்த்தி எது என்பதற்கான அதிகாரப்பூர்வ ஆவணமான சபரிமலையானத்தில் எந்த இடத்தி லும் நைனிக பிரம்மச்சாரிய மூர்த்தி என்கிற நம்பிக்கை குறித்து தெரிவிக்கவில்லை எனவும் அந்த விவாதத்தில் சுவாமி கூறினார்.

மற்றொரு விவாதத்தில் ஆச்சாரங்கள் காலந்தோறும் திருத்தப்பட்டு வரு கின்றன என்பதற்கு சான்றாக நம்பூதிரி-நாயர் சமுதாயங்களில் நீடித்து வந்த சம்பந்தம் என்கிற ஆச்சாரம் இப்போது இல்லாதது குறித்தும் சந்தீபானந்தகிரி விளக்கினார். நவீன மதிப்பீடுகளை ஏற்றுக்கொண்டு சம்பந்தம் என்கிற ஆச்சாரத்தை கைவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

நன்றி - தீக்கதிர் 29.10.2018

1 comment:

  1. Appreciate that saint's bravery.sanghis don't have knowledge of Hindu mythology.truth wins.sangis have only arrogance attitude.

    ReplyDelete