Friday, October 19, 2018

அம்மையார் இப்போது அதிகாரபூர்வமாக . . .


ஸ்டேட் வங்கியின் தலைவராக இருந்த அருந்ததி பட்டாச்சார்யா அம்மையார் அவர்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக பணியில் இணைந்துள்ளார்.

அதில் அதிர்ச்சிக்கோ, ஆச்சர்யத்துக்கோ எந்த அவசியமும் இல்லை.

அவர் ஸ்டேட் வங்கியின் தலைவராக இருந்த காலத்திலேயே அண்ணன் மோடி அவர்களின் உத்தரவுப்படி ரிலையன்ஸ் நிறுவனத்திற்காகவும் அதானிக்காகவும்தான் சிரமப்பட்டு உழைத்துக் கொண்டிருந்தார். 

அவர்களுக்கு அள்ளி அள்ளி கடன் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த கடனை வசூலிப்பது பற்றி மட்டும் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. விஜய் மல்லய்யா லண்டனுக்கு ஓடிப் போனது கூட இவரது பணிக்காலத்தில்தான்.

இது நாள் வரை ஸ்டேட் வங்கியின் தலைவராக இருந்து கொண்டு ரிலையன்ஸ் அம்பானிக்கும் அதானிக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர், இப்போது அதிகாரபூர்வமாக ரிலையன்ஸ் இயக்குனராக மாறியுள்ளார். நாளை அதானியின் இயக்குனர் குழுமத்தில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்பும் பிரகாசமாகவே உள்ளது. 

எங்கள் பென்ஷன் சட்டத்தில் ஒரு விதி உண்டு. பணியிலிருந்து ஓய்வு பெற்ற இரு வருடங்களுக்குள்ளாக வேறு வேலைக்குப் போனால் பென்ஷனை நிறுத்தி விடலாம். நிச்சயமாக ஸ்டேட் வங்கியிலும் அது போன்ற விதி இருக்கும்.

ஸ்டேட் வங்கியின் நிர்வாகம் குறைந்தபட்சம் அருந்ததி அம்மையாரின் பென்ஷனையாவது நிறுத்த வேண்டும், அது அவருக்கு பெரிய இழப்பாக இருக்காது என்றாலும் கூட


2 comments:

  1. முக்கிய பதிவு

    ReplyDelete
  2. ஒரு கேஸ் போட்ட எல்லாம் சரியாக நடக்கும்

    ReplyDelete