Thursday, July 10, 2014

"நேத்து ராத்திரி யம்மா" தொடங்கி "ஸ்ரீவெங்கடேசா" வரை


நேற்று இரவு திருப்பத்தூரிலிருந்து வேலூர் வரை பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். திருப்பத்தூரில் இரவு 8.40 க்கு பேருந்து புறப்படும்போது ஓட்டுனர் ஒலித்த முதல் பாடல் “நேத்து ராத்திரி யம்மா”. அதன் பின்பு நிலா காயுது, பொன்மேனி உருகுதே என வெறும் மிட்நைட் மசாலா பாட்டுக்கள் மட்டுமே. பள்ளி கொண்டா வரும் வரை எல்லாமே இது போன்ற பாடல்கள் மட்டுமே. பெண்கள் முகம் சுளித்த போதும் அவர் அதை கண்டு கொள்ளவே இல்லை.

பள்ளி கொண்டா டோல்கேட்டில் அவர் சி.டி மாற்றினார். அதன் பின்பு வேலூர் வந்து சேரும் வரை "ஸ்ரீவெங்கடேசா" என்று ஒரே ஒரு வெகு நீளமான தெலுங்கு பக்திப் பாடல் மட்டுமே.

அவர் யார் பக்திமானா இல்லை பலான பாட்டுப் பிரியரா?

பி,கு : நேற்று ஒலித்த பெரும்பாலான மிட் நைட் மசாலாப்பாட்டுக்கள் இளையராஜாவால் இசையமைக்கப்பட்டது. அப்படி இருக்கையில் அவருக்கு ஏன் சாமியார் என்ற தோற்றம் தரப்படுகிறது?

5 comments:

  1. He is a Complete Musician for all the human emotions.

    ReplyDelete
  2. எனக்கும் ஒருமுறை இதேமாதிரியான அனுபவம் உண்டு. பதிவின் முடிவில் நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி ஒரு பஞ்ச். அவரை இசைஞானி என்பதே அவ்வளவு பொருத்தமில்லை. அது ஒரு அலங்காரமான அபத்தம்.

    ReplyDelete
  3. மன்னிக்கவும் காரிகன், நான் மாற்படுகிறேன். How to Name it மற்றும் Nothing But Wind இரண்டுமே மட்டும் பொதும் ராஜா ஒரு இசைஞானி என்பதற்கு

    ReplyDelete
  4. Why should we confuse his profession and his personal preferences?. We are so judgmental!.

    ReplyDelete