Tuesday, January 14, 2014

வருத்தப்படாத வாலிபர் சங்கம் அவசியமில்லை.



வருத்தப்படாத வாலிபர் சங்கம்  திரைப்படத்தின் பாதிப்பால் என்னவோ தெரியவில்லை, எங்கள் பகுதியில் உள்ள ஒரு கோவிலின் வாயிலில் பக்தர்களை வரவேற்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பெயரில் ஒரு ப்ளெக்ஸ்  பேனர் வைக்கப்பட்டிருந்தது.

எதைப் பற்றியும் கவலைப்படாத, வருத்தப்படாத வாலிபர்களா இன்றைய தேவை?

சிறுமை கண்டு பொங்குவாய் என்று பாரதி பாடிய வாலிபர்கள்தானே இன்று நாட்டிற்கு மிகவும் முக்கியம்.....

வேலையின்மை, ஊழல், ஜாதிய மத மோதல்கள், விலைவாசி உயர்வு, பாலியல் வன்கொடுமை என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினை. எதைப்பற்றியும் கவலை கொள்ளாத ஆட்சியாளர்கள், அலட்சியமான அதிகார வர்க்கம் என்று இருக்கிற போது இந்த அவலங்களுக்கு எதிராக பொங்கி எழ வேண்டிய கடமை இளைஞர்களுக்குத் தானே உள்ளது?

அவர்களை வருத்தப்படாதே என்று சொல்லி முனை மழுங்க வைப்பது எப்படி நியாயமாகும்?

போராட வேண்டிய வாலிபர்களை இப்படி பேனர் வைக்கும் வாலிபர்களாக மாற்றி திசை திருப்பாதீர்கள்.

இந்தப் பிரச்சினைகளுக்காக அன்றாடம் போராடும் ஒரு வாலிபர் அமைப்பு உள்ளது என்பதும் அதிலே லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளார்கள் என்பதும் ஆறுதல் அளிக்கிறது.

அந்த அமைப்பு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.

1 comment:

  1. உங்களின் அறச்சீற்றம் நியாயமானதெ

    ReplyDelete