தேர்தல் கமிஷன் விதிகளை மிகச் சரியாக பின்பற்றும் ஒரே கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் அதன் நடைமுறையை
பின்பற்றியதால்தான் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது
என்று முன்னாள் தேர்தல் ஆணையர் திரு கோபால்சாமி பாராட்டியுள்ளார்.
இது புதிதல்ல, மார்க்சிஸ்டுகளின் இயல்பு. ரத்தத்தில் ஊறியது.
ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன்.
தூத்துக்குடியில் நான்கு நாட்களாக ஒரு பயிலரங்கில் கலந்து கொண்டேன்.
கட்சியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தற்போதைய
சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள்
நால்வர் ஆகியோரும் அந்த பயிலரங்கில் பங்கேற்றனர்.
அவர்களூக்கு என்று எந்த விசேஷ சலுகையோ, நாற்காலிகளோ
எதுவும் கிடையாது. மற்ற பங்கேற்பாளர்களைப் போல வரிசையில்
நின்று தேனீர் அருந்துவது, குழு விவாதத்தில் பங்கேற்பது என்று
மற்ற தோழர்களோடு இணைந்தே இருந்தார்கள்.
இந்த காட்சியை வேறு எந்த அரசியல் கட்சியிலாவது பார்க்க
முடியுமா?
இவர்களை வலிமைப்படுத்துவது மக்களின் கடமையல்லவா!
//..எந்த விசேஷ சலுகையோ, நாற்காலிகளோ
ReplyDeleteஎதுவும் கிடையாது. மற்ற பங்கேற்பாளர்களைப் போல வரிசையில்
நின்று தேனீர் அருந்துவது,..//
ஏனைய இந்திய அரசியல்கட்சிகளும் இந்த நல்லதை பின்பற்ற வேண்டும்.