Sunday, January 26, 2014

சரித்திரத்தின் தொடர்ச்சியாய், சரித்திரத்தின் தொடக்கமாய்



எங்களது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இருபத்தி மூன்றாவது பொது மாநாடு 20.01.2014 முதல் 24.01.2014 வரை நாக்பூர் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாடு முடிந்து நேற்று இரவுதான் வேலூர் திரும்பினேன். ஒரு அற்புதமான மாநாட்டில் பங்கேற்ற பரவசத்தோடு இருக்கிறேன். மாநாட்டு அனுபவங்கள், முடிவுகள் பற்றி கண்டிப்பாக பகிர்ந்து கொள்வேன்.

அதற்கு முன்பாக இரண்டு மகிழ்ச்சிகரமான செய்திகளை இங்கே பதிவு செய்கிறேன்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் புதிய பொதுச்செயலாளராக ஹைதராபாதைச் சேர்ந்த தோழர் வி.ரமேஷ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுவரை இருந்த அகில இந்தியப் பொதுச்செயலாளர்களான மகத்தான தலைவர்கள் தோழர்கள் பி.டி.தோன்டே, சந்திர சேகர போஸ், சரோஜ் சவுத்ரி, என்.எம்.சுந்தரம், கே.வேணுகோபால் போல தோழர் வி.ரமேஷ் அவர்களின் பணியும் மிகச் சிறப்பாக அமையும். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வெற்றி வரலாறு தொடரும். 


இம்மாநாட்டின் இன்னொரு சிறப்பம்சமாக கோவையைச் சேர்ந்த தோழர் எம்.கிரிஜா அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். எங்கள் சங்க வரலாற்றில் அகில இந்திய பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் மகளிர் தோழர் இவர்தான். 


தென் மண்டலப் பொறுப்பாளராக, மாதர் சங்க நிர்வாகியாக, சி.ஐ.டி.யு பொறுப்பாளராக அவர் செய்த பணிகள் அவரை அகில இந்திய அளவிற்கு உயர்த்தியுள்ளது. இப்பொறுப்பையும் அவர் திறம்பட நிறைவேற்றுவார்.

வாழ்த்துக்கள் தோழர் ரமேஷ்.
வாழ்த்துக்கள் தோழர் கிரிஜா

No comments:

Post a Comment