நின்றேன்,
அமர்ந்தேன்,
மாறி மாறி அமர்ந்தேன்,
படுத்தும் பார்த்தேன்.
அகன்றதும்தான் அறிந்தேன்.
உணரவும் செய்தேன்.
தேடல் எதுவுமின்றி
சிந்தனை எதுவுமின்றி
போதி மரம்
தானாக
ஞானம் தாராது
புத்தனுக்கும் கூட.
(நாக்பூர் தீக்ஷா பூமியில்
உள்ள போதி மரம்
எனக்கு அளித்த கவிதை இது).
EXCELLENT.
ReplyDelete