Sunday, January 12, 2014

இரண்டு திரைப்படங்கள் – என் விமர்சனம்





இது ஏதோ வீரம் மற்றும் ஜில்லா படத்து விமர்சனங்கள் என்று நினைத்தால் தயவு செய்து மன்னியுங்கள். இது அவை வெளியாவதற்கு சற்று முன்பு வெளியான படங்கள்.

பொதுவாக திரைப்படங்கள் பார்க்கும் வழக்கம் இல்லையென்றாலும் சமீபத்தில் இரண்டு படங்கள் பார்த்தேன். ஒன்று “பிரியாணி” இன்னொன்று “என்றென்றும் புன்னகை”.

பையனின் கட்டாயத்தால் பார்த்தது பிரியாணி. தூத்துக்குடி வகுப்பிற்கு சென்ற போது ஒரு நாள் ஆறு மணிக்கே வகுப்பு நிறைவடைந்து விட்டதால் பக்கத்தில் இருந்த அரங்கில் பார்த்தது என்றென்றும் புன்னகை.

இந்த இரண்டு படங்களிலும் பொதுவாக பார்த்து வெறுத்துப் போன ஒரு அம்சம் – குடி, குடி, குடி.

முன்பு லிம்காவிற்கு ஒரு விளம்பரம் வரும்.

காலையில் எழுந்ததும் லிம்கா, தூங்கும் முன் லிம்கா, சாப்பிடும்போது லிம்கா, சாப்பிட்ட பின் லிம்கா, துக்கத்திற்கும் லிம்கா, மகிழ்ச்சிக்கும் லிம்கா, பயணத்தின் முன்பும் லிம்கா, பின்பும் லிம்கா. என்னைப் போன்ற வயதானவர்களுக்கு இந்த விளம்பரம் நினைவில் இருக்கலாம்.

அது போல இந்த இரண்டு திரைப்படங்களிலும் வரும் கதாபாத்திரங்கள் எதற்கெடுத்தாலும் மது அருந்துகிறார்கள். எல்லா நேரத்திலும் மது அருந்துகிறார்கள். எல்லா சூழ்நிலைகளிலும் மது அருந்துகிறார்கள், எல்லா இடங்களிலும் மது அருந்துகிறார்கள். சிவப்பு எச்சரிக்கை எப்போதும் திரைக்குக் கீழே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. டாஸ்மாக்கின் வருமானத்தை பெருக்குவதில் அம்மாவை விட தமிழ் திரைப்பட இயக்குனர்கள் மிகவும் துடிப்பாக இருக்கிறார்கள் போலும்.

இளைஞர்களை நீங்களே மதுபானக்கடைக்கு அனுப்பி விடாதீர்கள், தயவு செய்து.

5 comments:

  1. உண்மையான கூற்று...
    இன்று இளைஞர்களை சீரழிப்பதில் முன்னோடி...சினிமா
    தங்களைப்போன்ற பெரியவர்கள் நிறைய சினிமாக்களை பார்த்து கண்டனங்களை தெரியப்படுத்துங்கள்....இன்றைய நவீன காலத்தில் அன்றைய பாரதி போன்று விமர்சனங்களால் எழுச்சி கொள்ளுங்கள்
    சிநிமாவியாதிகளை சினிமா விமர்சனம் என்ற ஆயுதத்தால் அழிக்க வாருங்கள் அய்யா...........

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, இரண்டரை மணிநேர திரைப் படத்தில் முழுக்க முழுக்க வன்முறை காட்சிகளோ அல்லது குடி கலாச்சாரத்தை நியாய படுத்திவிட்டு ஊறுகாய் போல முடிவில் ஒரு விடயத்தை நியாய படுத்தி இயக்குநர்கள் முடிக்கிறார்கள் படம் பார்த்த மக்களின் மனதில் வன்முறை,குடி கலாச்சரம் வேரூன்றுமா அல்லது நல்ல விஷயங்கள் பதியுமா ? கேள்விகுறிதான்

    ReplyDelete
  3. மிகவும் மோசமான படங்கள் இவை தான். அண்மைய திரைப்படங்களில் எல்லாம் பார் காட்சிகளே நிரம்பிய வழிவது நிச்சயம், டாஸ்மாக் குழுமத்துக்கும் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் ஏற்பட்ட விளம்பர ஒப்பந்தமாக இருக்குமோ என தோன்றச் செய்கின்றது. சில படங்கள் குடியின் தீமையை எடுத்துரைத்தாலும், அதில் கூட காமெடியாகவே சொல்வதால், அனைவரும் குடிப்பதை காமெடியாகவே நினைத்துக் கொள்கின்றனர்.

    கள்ளச்சாராயத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரியில் சில நூறு பேர் சாவுறாங்க எனக் கூறி இன்று சந்துக்கு சந்து டாஸ்மாக்கை துறந்துவிட்டு ஆண்டுக்கு ஆயிரம் ஆயிரம் பேரை சாவடிக்கும் தமிழக அரசும், தமிழக சமூகமும், இதன் பராபலனை வெகுவிரைவில் அனுபவிக்கும்.

    ReplyDelete
  4. Do you know how much marketing(or) funding by all brewing/drinks company goes to each movie ? Not a single movie without Beer!!

    ReplyDelete
  5. Pl see the latest movie PANDIYA NADU in which not a single scene depicts drinking

    ReplyDelete