Wednesday, January 15, 2014

பதட்டமான அந்த ஐந்து நிமிடங்கள்



தூத்துக்குடியிலிருந்து வேலூர் புறப்படும் வேளை. ரூமை காலி செய்து விட்டு புறப்படும்போது பார்த்தால் தொலைபேசியை காணவில்லை. என்னிடம் இரண்டு தொலைபேசிகள் உண்டு. ஒன்று சங்கத்தினுடையது, இன்னொன்று சொந்த தேவைகளுக்கானது. இந்த இரண்டில் சங்க தொலைபேசியை காணவில்லை.

முதலில் ஒன்றும் புரியவில்லை. சொந்த தொலைபேசியிலிருந்து அந்த எண்ணிற்கு அழைத்தால் ரிங் செல்கிறது. ஆனால் ரிங்டோன் சப்தம் மட்டும் கேட்கவில்லை.

எங்கு தொலைந்திருக்கும் என்று யோசனை செய்தால் நினைவிற்கு எதுவுமே வரவில்லை. தொலைபேசி கூட புதிது வாங்கிக் கொள்ளலாம். பி.எஸ்.என்.எல் லில் சொல்லி எண்ணை முடக்கி வேறு சிம்கார்ட் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் பதிவு செய்து வைத்துள்ள எண்ணூறுக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள்? அப்படியே தலை சுற்றியது.

வகுப்பு முடிந்து புறப்பட்ட போது ஒரு தொலைபேசி அழைப்பிற்கு பதில் அளித்தது நினைவிற்கு வந்தது. மண்டபத்திலா, இல்லை வரும் வழியில் சென்ற ப்ரௌசிங் சென்டரா இல்லை ஆட்டோவிலா எங்கே தொலைத்திருப்பேன் என்று யோசனை செய்தாலும் எதுவும் பிடிபடவில்லை.

பேக் செய்த போது பைக்குள்ளே வைத்திருப்பேனா என்று பையை அப்படியே கொட்டி பார்த்தாலும் கிடைக்கவில்லை. சரி இந்த இடங்களுக்கெல்லாமே போய் பார்த்து விட்டு வரலாம் என்று புறப்பட்ட போது படித்து விட்டு ஓரமாக வைத்திருந்த நாளிதழிற்குள் இருந்து கண் சிமிட்டியது தொலைபேசி.

வகுப்பு நடக்கும் போது சைலண்ட் மோடில் போட்டதை மாற்றவே இல்லை. அதனால்தான் ரிங் டோன் சப்தமே வரவில்லை.

ஆகவே எந்த காரணத்திற்காகவாவது சைலண்ட் மோடில் போட்டால் உடனடியாக மாற்றி விடுங்கள். இல்லையென்றால் இப்படித்தான் தேவையே இல்லாமல் பதட்டமாக வேண்டியிருக்கும்.

2 comments:

  1. நல்ல அனுபவ பாடம்! நன்றி!

    ReplyDelete
  2. ஆட்டை தோள் மீது வைத்து கொண்டே ஆட்டை தேடிய கதை நினைவிற்கு வருகிறது தோழரே ! ஹா ஹா !

    ReplyDelete