நாக்பூர் போனதால் படிக்காமல் விட்ட வார இதழ்களை இன்று காலையில்தான் படித்து தமிழக நிலவரங்களை அறிந்து கொண்டேன். இரண்டு இதழ்களில் தரகுப்புயல் தமிழ் அருவி மணியன் அவர்களின் பேட்டியும் கட்டுரையும் வந்திருந்தது.
அதிலே ஒரு கட்டுரையில் அரவிந்த் கேஜ்ரிவாலை அவர் மிகக் கடுமையாக தாக்குகிறார். அதில் ஒன்றும் தவறில்லை. அரவிந்த் கேஜ்ரிவால் எப்படி செயல்பட வேண்டும் என்று போதிக்கிறார். அதிலும் தவறில்லை. எந்த வித கொள்கையோ கோட்பாடோ இல்லாத அமைப்பாகத்தான் ஆம் ஆத்மி கட்சி உள்ளது என்ற விமரிசனமும் சரிதான்.
எனக்கு ஒரே ஒரு கேள்விதான் உண்டு.
அரவிந்த் கேஜ்ரிவாலிடம் நீங்கள் எதிர்பார்க்கிற எல்லா நற்குணங்களும் நீங்கள் உயர்த்திப் பிடிக்கிற நரேந்திர மோடியிடம் உள்ளதா?
மத வெறி அற்றவராக, சுய சார்பு சுதேசிப் பொருளாதாரத்தை தாங்குபவராக, பன்னாட்டுக் கம்பெனிகளின் பாதம் தாங்கியாக இல்லாத, வெற்று ஆடம்பரத்தை விரும்பாதவராக, ஊழல் பேர்வழிகளை ஊக்குவிக்காதவராக, நேர்மையானவராக, விளம்பர ஸ்டண்ட்டில் நாட்டம் இல்லாதவராக உங்கள் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இருக்கிறாரா? அப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று பாஜக விடம் சொல்லும் தைரியம்தான் உங்களுக்கு இருக்கிறதா? உங்களால் கண்டிப்பாக முடியாது.
அதே போல பாமக வை இப்போது ஜாதிக்கட்சி என்று விமர்சிக்கிற நீங்கள் உங்கள் கனவுக் கூட்டணியில் பாமக வை இணைக்க முயன்றது ஏன்? திராட்சை கிட்டாத நரியின் புலம்பலா உங்களின் விமர்சனம்?
இந்த முரண்பாடுகளை சுட்டிக்காட்டினால் நீங்கள் வலைப்பக்கங்களில் எழுதுபவர்கள் ஞானமற்றவர்கள், எந்த அனுபவமும் அற்றவர்கள், அறிவற்றவர்கள், அவர்கள் எழுதுவதை படித்து என் நேரத்தை விரயமாக்க மாட்டேன் என்று சாடுகிறீர்கள். அரவிந்த் கேஜ்ரிவாலின் அராஜகத்திற்கும் உங்களின் இந்த பதிலுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
தங்களை விமர்சிப்பவர்களை முட்டாள்களாகவும் உங்களை மிகவும் உயர்ந்தவராகவும் கருதும் உங்களின் இந்த ஆணவமான பதில் “நீங்கள் இத்தனை நாள் காந்தியவாதியாக வேடம் தரித்த ஒரு கபடப் பேர்வழி” என்பதை மீண்டும் அம்பலமாக்கி விட்டது. வலைப்பக்கம் எழுதும் எங்களைப் போன்றவர்களுக்கு உங்களைப் போல ஞானமும் அனுபவமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களிடமில்லாத நேர்மை இருக்கிறது. கொண்ட கொள்கையில் உறுதி இருக்கிறது. உங்களைப் போன்ற சந்தர்ப்பவாதிகள் அல்ல நாங்கள், பச்சோந்திகள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியதில்லை.
அருமையாகச் சொன்னீர்...
ReplyDeleteமிக சரியாக கேட்டு இருக்கிறீர்கள்? சபாஷ்
ReplyDelete/// வலைப்பக்கங்களில் எழுதுபவர்கள் ஞானமற்றவர்கள், எந்த அனுபவமும் அற்றவர்கள், அறிவற்றவர்கள், அவர்கள் எழுதுவதை படித்து என் நேரத்தை விரயமாக்க மாட்டேன் என்று சாடுகிறீர்கள். //
இது நம்மை பற்றி அவர் சொன்னது அல்ல மோடி அவர்கள் பணம் கொடுத்து எழுதச் சொல்லும் வலைப்பக்கங்களை பற்றி சொல்லி இருக்கிறார் போல...
மோடியை விட கேஜ்ரிவால் பல மடங்கு சிறந்தவராக எனக்குப் படுகின்றது, ஒரே ஒரு குறை அரசியல் அனுபவம் குறைவு, அதுவும் பழகப் பழகப் பழகி விடும் அல்லவா...! பார்ப்போம்.
ReplyDeleteஇப்போது உள்ளவர்களில் மோடிதான் தகுதி உள்ளவர் என்பது அவர் கருத்தாக இருக்கும். என் போன்றவர்களின் கருத்தும் அதுதான்.
ReplyDeleteநீங்கள் கூறும் மத வெறி என்பதன் அர்த்தம் என்ன.
50 பேரை கொளுத்தும் அளவுக்கு துணிவு அந்த மிகச்சிலருக்கு எங்கிருந்து வந்தது. திருப்பி அடித்தால் மதவாதி என்று பெயர் வைப்பீர்களா. (அங்கு நடந்த கொடுமைகளுக்கு முதல் காரணம் யார்). இஸ்லாமின் பெயர் கொண்ட கட்சிகள் மத்வாதக் கட்சிகள் இல்லையா.
யாருமே பொய்த் தொழாத ஒரு இடத்தை இடித்தால் (அதைக் கட்டுவதற்கான பணத்தை அவர்கள் எங்கிருந்து கொண்டுவ்ந்தார்கள் என்று யாரும் கேட்டவில்லை) அதற்கு பதிலடி மும்பையில் 150 உயிரை வாங்குவதுதானா. அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தார்கள் என்று கூறி மழுப்புவீர்களா. (ஒரு உயிரை எடுப்பது பெரிய பாவம் - யார் செய்தாலும்)
சிறுபான்மையினர் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை சர்ச்சுகளும் மசூதிகளும் தீர்மானிக்கின்றன என்பது இங்குள்ள ஒரு குழந்தைக்குக் கூடத் தெரியும். நாம் ஒரு மதச்சார்பற்ற நாட்டில் வாழுகிறோம் என்று உங்களால் கூற முடியுமா.
மதங்களோடு மற்ற கட்சியினர் எப்போதும் சாதிகளை ஏன் இணைக்கிறார்கள் (பிஜேபி ஒரு பிராமணர் கட்சி என்று ஒரு பெண்மணி தொலைக்காட்சியில் கூறினார்). நீங்களும் இவரில் ஒருவரா. சாதி, மத்ங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு வேட்பாளரை இந்தியாவில் எந்தக் கட்சி இதுவரை நிறுத்தியிருக்கிறது.
வேலை காலியில்லை என்ற போர்டுகள் போய். ஆள் தேவை என்ற போர்டுகள் வந்ததற்கு அன்னிய முதலீடு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியுமா. மோடியும் அதையே விரும்புகிறார்.
மோடியின்மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் எத்தனை.
எங்களிடம் எல்லாம் இருக்கிறது எனும் நீங்கள் இதற்கெல்லாம் பதில் கூற முடியுமா.
கே. கோபாலன்
//நேர்மை இருக்கிறது. கொண்ட கொள்கையில் உறுதி இருக்கிறது//.
ReplyDeleteஅதை நான் அனுப்பிய பதிவை வெளியிட்டு நிரூபிக்க முடியுமா
கே. கோபாலன்
ஆகா ! அருமை!
ReplyDelete// ஆனால் உங்களிடமில்லாத நேர்மை இருக்கிறது. கொண்ட கொள்கையில் உறுதி இருக்கிறது. உங்களைப் போன்ற சந்தர்ப்பவாதிகள் அல்ல நாங்கள், பச்சோந்திகள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியதில்லை.// மிக அருமையாக கூறி இருக்கிறீர்கள் சார்.வாழ்த்துக்கள் ..
ReplyDeleteசுயநலம் மட்டுமே தமிழருவியின் குறிக்கோள் ...
ReplyDeleteKerala Communist Leader admits – We Kill Our Political Opponents
ReplyDeleteதிரு கோபாலன், உங்கள் பின்னூட்டத்தை அப்படியே வெளியிட்டுள்ளேன்.
ReplyDeleteஇன்றைய இந்தியாவின் அனைத்து மதக் கலவரங்களுக்கும் துவக்கப்
புள்ளி உங்கள் இயக்கம் என்பதை மூடி மறைத்து எவ்வளவு அழகாக
பொய் சொல்லுகிறீர்கள் . இதுதான் உங்கள் உத்தி. உங்களுக்காக நாளை
சிறப்பு பதிவு ஒன்று எழுதுகிறேன். அதற்கு முன்பு இன்று எழுதுவதற்கு
பதில் சொல்லுங்கள்.
திரு விஜயன், அப்படி உளறிய நபர் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது
ReplyDeleteஎன்பதும் காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும்
இல்லை என்று விடுவித்ததும் உங்களுக்கு தெரியுமா?
என் பதிவிற்கு சம்பந்தமே இல்லாமல் பின்னூட்டம் போட உங்களை
அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. விதண்டாவாதம் என்று சொன்னால் மட்டும் கோபித்துக் கொள்வீர்கள்.
இன்றைய செய்தி தாள்களில் வந்த செய்தி,கேரளா மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான சந்திரசேகரனை கொலை செய்ததாக மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களில் மூன்றுபேர் உட்பட 11 பேருக்கு கேரளா சிறப்பு நிதி மன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
ReplyDeleteவிஜயன் சார், நீங்க பின்னூட்டம் மட்டுமே எழுதி பெயர் வாங்கும் புலவரோ, நீங்களும் எழுதுங்க, அப்போதானே நானும் உங்களை மாதிரியே சம்பந்தமே இல்லாம ஏதாவது விதண்டாவாதமா எழுத முடியும்.. உங்க வலைப்பக்கத்துக்கு போய் இப்பத்தான் இந்த பின்னூட்டத்தை எழுதிட்டு வந்தேன்
ReplyDeleteகோபாலன் சார், எங்க போனீங்க, உங்களுக்காகவே மாய்ஞ்சு மாய்ஞ்சு ஒரு பதிவு போட்டா காணாம போய்ட்டிங்களே! வாங்க சார், சம்பந்தம் சம்பந்தமே இல்லாமாலவது ஏதாவது கேளுங்க
ReplyDelete