Thursday, January 16, 2014

எம்.பி சீட்டிற்காக தவித்தது மாறன் பிரதர்ஸ் அத்தைதான், மார்க்சிஸ்ட் கட்சி அல்ல.




இன்றைய தினகரன் நாளிதழ் ராஜ்யசபா சீட்டிற்காக மார்க்சிஸ்டுகள் தவிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதை சுவரொட்டிச் செய்தியாய் விளம்பரமும் செய்துள்ளது.

எம்.பி, எம்.எல்.ஏ பதவிக்காக மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் ஏங்குவதில்லை. அது எங்களின் இறுதி இலக்கும் இல்லை. எங்கள் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல தேர்தலையும் ஒரு வாய்ப்பாக கருதுகிறோம். வெற்றி கிடைக்கும் பட்சத்தில் அந்த பதவிகளை பொறுப்பாக கருதி மக்களுக்கும் நாட்டுக்கும் எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அத்தனை நன்மைகளையும் செய்கிறோம். ஆகவே தினகரன் செய்தி அதன் கற்பனை வளத்திற்கு மீண்டும் ஒரு சான்று.

அழகிரி கூட்டம் போல மார்க்சிஸ்டுகள் அலுவலகத்தை எரித்து மூன்று உயிர்கள் பறி போக காரணமாக இருக்க மாட்டார்கள் என்ற தைரியத்திலும் தாத்தாவின் வேண்டுகோளை நிராகரித்து விட்டார்களே என்ற கோபமும் பேனாவில் மைக்கு பதிலாக பொய்யை ஊற்றி எழுதி உள்ளார்கள்.

மாறன் பிரதர்ஸ் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளட்டும்.

2 ஜி, கலைஞர் டிவி பங்கு பிரச்சினை, திஹார் ஜெயில் ஆகிய காரணங்களுக்காக எம்.பி யாக வேண்டும் என்று அவர்களின் அத்தை கனிமொழிதான் தவித்தார். அதற்காக அவர்கள் தாத்தா காங்கிரஸ் கட்சியிடம் கையேந்தினார். பாமகவின் மன்றாடினார்.

ஆக பாதுகாப்பிற்காக பதவி வேண்டும் என்று தவித்தது தினகரன் வகையறாக்கள்தான்.

7 comments:

  1. this time, DMK kku sangu thaan. athaan pulambal.

    ReplyDelete
  2. லீலாவதியை கொலை செய்தவர்களோடு கம்முனிஸ்ட்கள் கூட்டணி வைத்தது எதற்காக..

    ReplyDelete
  3. தர்மபுரியில் கோவை விவசாய கல்லூரி மாணவிகளை எரித்ததும் மதுரை நிகழ்ச்சிக்கு கொஞ்சமும் குறையாத கொடுமை இல்லையா தோழரே?தேர்தல் பதவிகள் உங்கள் ultimate goal இல்லையென்றால் இதையெல்லாம் நீங்கள் கடுமையாக விமர்சிக்க வேண்டாமா?இரண்டில் ஒன்றை மாற்றி மாற்றி ஆதரிப்பது எந்த உழைப்பாளிகளின் சொர்கத்தை அமைக்க?இதில் எந்த உள்நோக்கமும் இல்லை,தாங்கள் விளக்கினால் புரிந்துகொள்ள முயலுவேன்.

    ReplyDelete
  4. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. பதவி ஆசை இல்லாமல் / பதவியால் சம்பாதிக்க நினைக்காமல் வாங்கிய சம்பளத்தை கட்சிக்கு கொடுத்துவிட்டு கட்சி கொடுக்கும் குறைந்த சம்பளத்தை வாங்கிக்கொள்பவர்கள் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே. அதற்கு ஒரு சல்யூட்!

    ReplyDelete
  5. கம்யூனிஸ்ட் என்று சொல்வதற்கு பதிலாக கம்மூனிஸ்ட் என்று நக்கலாக அழைக்கும் அரைகுறை அனானிகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய

    அவசியம் இல்லை.

    ReplyDelete
  6. விஜயன் சார், மத வெறி சக்திகளுக்கு எதிரான அணியில் நாங்கள்

    உள்ளோம். அதிலே மற்றவர்கள்தான் மாறி மாறி செல்கிறார்கள்.

    உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக , அவர்களுக்கு உண்மையிலேயே

    ஒரு சொர்க்கத்தை உருவாக்கும் தகுதி எங்களுக்கு மட்டுமே உண்டு.

    அதனால்தான் ஊடகங்கள் எங்களை இருட்டடிப்பு செய்கின்றன.

    தருமபுரி, மதுரை இரண்டுமே கண்டிக்கத் தக்கது.

    பரமக்குடி கலவரம் தொடர்பான சம்பத் கமிஷன் அறிக்கையை தமிழக

    அரசு நிராகரிக்க வேண்டும் என்று எங்கள் மாநிலக் குழு தீர்மானம் நிறைவேற்றியது உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  7. \\மாறன் பிரதர்ஸ் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளட்டும்.

    2 ஜி, கலைஞர் டிவி பங்கு பிரச்சினை, திஹார் ஜெயில் ஆகிய காரணங்களுக்காக எம்.பி யாக வேண்டும் என்று அவர்களின் அத்தை கனிமொழிதான் தவித்தார்.\\KD பிரதர்சுக்கு கனிந்தமொழி அத்தை உறவு அல்ல, ஒருவேளை சித்தி உறவு வரலாம். ஏனெனில், அவர்கள் அப்பா மஞ்சள் துண்டின் அக்கா மகன், கனிந்தமொழிக்கு அத்தை மகன். இப்போது தெளிவாகிறதா?

    ReplyDelete