Sunday, January 12, 2014

விவேகானந்தரை விட்டு விடுங்கள்





ஒருநாளும் இல்லாத திருநாளாக இன்று வேலூர் நகரத்தில் எல்லா இடங்களிலும் சின்னதாக ஷாமியானா வைத்து விவேகானந்தர் படத்தை வைத்திருந்தார்கள். கூடவே காவிக்கொடியும் இந்து தர்மக் காவலர் என்றும் இந்து தர்மத்தை காப்போம் என்ற வாசகமும் கூட.

இது சங் பரிவார் ஏற்பாடு. வேலூர் தங்கக் கோயில் சாமியார் படம் போட்ட பேனர்களும் வேறு அங்கங்கே இருந்தது (அலைந்து திரிந்து அனுமதி வாங்கினார்களா என்று தெரியாது). ஒரு வேளை இதற்கெல்லாம் பண ஏற்பாடு தங்கக்கோயில் சாமியாராகக் கூட இருக்கக்கூடும்.

விவேகானந்தரின் நூற்றி ஐம்பதாவது பிறந்த நாள் என்பதனால் இந்த கேளிக்கைகள் என்று யாராவது விளக்கம் அளிக்கக் கூடும்.

ஆனால் விவேகானந்தரின் கொள்கைக்கும் வாழ்க்கைக்கும் இவர்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

அவர் உண்மையான துறவி. மத நம்பிக்கை உடையவர்தான். ஆனால் மத வெறியர் அல்ல. மாற்று மதங்களை வெறுத்தவர் அல்ல. மற்ற மதங்களை சமமாக மதித்தவர். சகோதர சகோதரிகளே என்று அழைத்தவர். மத நம்பிக்கைகளை விட மனிதம் உயர்ந்தது என்று கருதியவர்.

மனிதர்கள் பஞ்ச காலத்தில் பட்டினியால் வாடிய போது பசுக்களை பாதுகாக்க நிதி திரட்ட வந்தவர்களை சாடி அனுப்பியவர்.

அவருக்கு விழா எடுக்க மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு, மாற்று மதத்தவர் மீது துவேஷத்தை பரப்புபவர்களுக்கு, மத வெறியை தூண்டுவதன் மூலம் ஆட்சியை கைப்பற்ற நினைப்பவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.

விவேகானந்தரை விட்டு விடுங்கள்.

உங்களுக்கு பொருத்தமானவர் நித்தியானந்த சாமியார்தான்.


No comments:

Post a Comment