விஸ்வரூபம் திரைப்படத்தின் போது வீரமாகவும் உணர்ச்சியோடும்
பேசிய கமலஹாசனா இப்போது ஜெயா டிவியில் தமிழக
முதல்வரின் பெருமைகளைப் பற்றியும் குணநலன்களைப் பற்றியும்
பாராட்டிக் கொண்டிருக்கிறார்?
இந்தியன் திரைப்படத்தில் அவர் சொன்ன அதே வசனம்தான்
நினைவிற்கு வருகிறது.
கமலஹாசன் என்றொரு மானஸ்தர் இருந்தாரே, அவர் எங்கே?
தா.பாண்டியன், நல்லக்கண்ணு போன்றவர்களே மானஸ்தர்களா இருக்க முடியாம தவிக்க, சினிமா நடிகர்கிட்ட எதிர்பார்க்கலாமா.
ReplyDeleteHE IS ALWAYS A GOOD BUSINESS MAN SELLING HIS EMOTIONS.....
ReplyDeleteஅதே இந்தியன் படத்தில் தனது வேலைக்காக பாவாடைக்கு நாடா கோர்ப்பாரே அதுவும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது
ReplyDeleteஹி! ஹி! ஹி! விஸ்வரூப படத்திற்கு ஏற்பட்ட தடைகளின் போது மட்டுமல்ல, திரைபடவிழாவிலும் இவரை அம்மா அவமானபடுத்தினாங்களாம். அதற்காகவும் அப்படி அம்மாவை அவர் பாராட்டி பேசியிருப்பார்.
ReplyDeleteவிஸ்வரூபம் படம் வந்தபோ இவருக்கு பெரியளவில் அனுதாபத்தை,ஆதரவை தேடி கொடுத்து இவரை வெற்றிக்கு கொண்டு வந்ததே மதவாத அமைப்புக்கள்.
உங்க பதிவின் மூலமே பெங்கலுக்கு வீரம் என்ற படம் வந்திருக்கு என்று செய்தி அறிந்து கொண்ட நான்,விஸ்வரூபம் படத்தை போய் டிக்கட் வாங்கி பார்த்திருக்கேன்.
கமலஹாசன் ஒரு சாதாரண வியாபாரி, மேலும் வடிகட்டிய சுயநலவாதி. ஒரு முட்டாக் கூட்டம் அந்த வியாபாரியைப் எதற்கெடுத்தாலும் புகழ்ந்துகொண்டு திரிகிறது..கமலஹாசனைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாமல், நீங்க மானஸ்தர் மண்ணாங்கட்டினு அந்தாளைப் பத்தி நெனச்சு இருந்தா அது எவன் தப்பு?! போயி எங்கேயாவது கருங்கல்லாப் பார்த்து முட்டிக்கோங்க- தலை பிளந்து தையல் போடுமளவுக்கு. அப்போத்தான் இந்தப் பதிவும் ஞாபகத்தில் இருக்கும். இல்லைனா மறுபடியும் கமல் மானஸ்த்தன் மண்ணாங்கட்டி எதிர்காலத்தில் நீங்களே இன்னொருமுறை உளற வாய்ப்பு உண்டு!
ReplyDeleteஎனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகமல் என்ன முட்டாளா.
ஜெயா TV யிலிருந்து, உஙகளுக்கு மானம், மரியாதை என்று ஏதாவது இருக்கிறதா. இல்லை என்று சொன்னால் மட்டும் தொடர்ந்து பேசுங்கள் என்றுதான் தொலைபேசியில் அழைப்பு வந்திருக்கும்.
என் அதிர்ஷ்டம், கமல் ரசிகனாயினும் இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை.
கே. கோபாலன்
ஆல் பழுத்தா அங்கே கிளி, அரசு பழுத்தா இங்கே கிளி.....................!!
ReplyDeleteகாய்தல் உவத்தல் அன்றி பார்த்தால் கமல் நேற்று (14,1,14) அப்படி ஒன்றும் அம்மா புகழ் பாடியதாகத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன்.. அதே சமயம் அவருடன் ஏற்பட்ட திரை அனுபவங்களை மட்டுமே பகிர்ந்தார்.. மேலும் அவரை ஒரு புரட்சி வீரர் போல பார்க்க அவசியம் இல்லை.. அன்பே சிவம் படம் வெளிவந்தவுடன் அவரை CPM காரர்கள் வெகுவாக கொண்டாடினார்கள்.. ஆனால் நான் ஒரு கம்யூனிஸ்டு இல்லை என்றாரே,, ஆக அவர் ஒரு கலைப் படைப்பாளி அதற்கு மேல் அவர் தலை மேல் நீங்களோ யாரோ திணிக்கும் பாரத்திற்கு அவரை குறை சொல்ல முடியாது தோழர் ராமன்....
ReplyDeleteஇதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. விஸ்வரூபம் படத்தின் போது கமலின் கோபம் முதல்வர் மீது இல்லை. அதே போல் ஒருவர் பற்றிய நல்ல விஷயங்களை கூற கட்சி முத்திரை அவசியம் கிடையாது.
ReplyDelete