Tuesday, June 7, 2011

அயோக்கியனுங்களா! என்னடா சீன் போடறீங்க!

ஒரு போலிச்சாமியார் , சுகபோக சொர்க்க வாழ்வை நடத்துபவன், 
அவன் பொய்யாய்  ஒரு காரணம் சொல்லி  ஒரு பெரிய மைதானத்தை
வாடகைக்கு  எடுத்து   மிகப் பெரிய போராளி போல உண்ணா விரதம் நடத்துகிறான்.  உண்ணா விரதம் தொடங்கு முன் " போகாதே போகாதே 
என் கணவா " என மத்தியமைச்சர்கள்  காலில் விழுந்து மன்றாடினார்கள். 
தொண்டரடிப்பொடிகளுடன்  உண்ணா விரதம் இருந்த போலிச்சாமியாரை
அங்கிருந்து காவல்துறை மூலம்  அகற்றுகின்றனர்.  இதற்கு என்னவெல்லாம்  எதிர்வினைகள்? மீண்டும்  ஒரு ஜாலியன்வாலாபாக்  என்று  இந்தியாவில்  மத மோதல்களுக்கு   வித்திட்ட ரத்த யாத்திரை  அத்வானி சொல்கிறார். இந்திய தொழிலாளி  வர்க்கத்தின்  எதிர்காலத்தை நாசம் செய்யும் 
பென்ஷன் மசோதா தோற்றுப் போகும் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு
முட்டு கொடுத்த பாஜக வும் சுஷ்மா ஸ்வராஜும்  பிரத்யேக நாடாளுமன்ற
கூட்டம்  வேண்டும்  என முழங்குகின்றார்கள். 


என்ன செய்வது, வேறு வழியில்லை என மன்மோகன்சிங் பசப்புகிறார். 


உச்ச நீதிமன்றமும் மனித உரிமை ஆணையமும்  தானாகவே மூக்கை 
நுழைக்கின்றன. 


போலிச்சாமியாரின்  விளம்பர உண்ணாவிரதம் முடக்கப்பட்டதற்காக
கலங்கி நின்று கண்ணீர் வடிக்கும் அற்பங்களே,


குஜராத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோது  எங்கே போனீர்கள்? 


இலங்கையில் தமிழ் இனம் பூண்டோடு துடைத்தெறியப்பட்டபோது
உங்கள் கண்களை என்ன காந்தாரி போல துணியால் கட்டிக்கொண்டிருந்தீர்களா? 


இந்திய தொழிலாளிகள் பன்னாட்டு முதலாளிகளால்  எவ்வளவோ 
முறை தாக்கப்பட்டிருக்கிறார்களே, ஹரியானா ஹோண்டா முதல்
சென்னை ஹுண்டாய்  வரை.  எத்தனை முறை விவசாயிகள் 
தடியடி பட்டுள்ளார்கள்! துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி உள்ளார்கள்?  மாணவர்கள்  வாங்காத குண்டாந்தடியடிகளா? 
பத்திரிக்கையாளர்கள் கூட அடக்குமுறைக்கு தப்பியதில்லையே! 


அப்போதெல்லாம்  வாயில் கொழுக்கட்டை வைத்திருந்தவர்களுக்கு 
இப்போது மட்டும்  மனித உரிமை பற்றி  கோபம் பொங்குகிறது என்பதை
பார்க்கையில்  நானும்  தரமிறங்கி  கூறுகிறேன். 


அயோக்கியனுங்களா!   என்னடா சீன் போடறீங்க!  
 

3 comments:

 1. அவர் ஒரு போலி சாமியாராகவே இருக்கட்டும் ,மந்திரிகள் ஏன் போய் காலில் விழுகிறார்கள் ?!அவசரமாக கூட்டத்தை கலைக்கிறார்கள் ?,நீங்களோ நானோ போய் உண்ணாவிரதம் இருந்தால் யாராவது மதிப்பார்களா ?இல்லை இவ்வளவு தூரம் மக்களுக்கு தெரிய வருமா ?ஒரு பிரச்சனையை முன்னெடுக்கும் போது அதன் விழைவுகள் எவ்வளவு நன்மையை தருமென யோசிக்க வேண்டும் ,ராம் தேவ் பற்றி இனி சிபிஐ விசாரிக்க உள்ளதால் அதன் முடிவுகள் வந்த பிறகு பார்த்துகொள்வோம் .

  ReplyDelete
 2. \\அயோக்கியனுங்களா! என்னடா சீன் போடறீங்க! //

  நியாயமான சினம்.சினத்திற்கேற்ற வரிகள்.

  ReplyDelete
 3. நல்ல பதிவு.

  ReplyDelete