கீழே உள்ள படத்தை , விளம்பரத்தை நன்றாக கவனியுங்கள்.
அது சொல்லும் செய்தி என்ன?
நீங்கள் பயன்படுத்தும் தொலைபேசி சேவையால் யாருக்கு பயன்?
ஐடியா பிர்லாவை பணக்காரனாக்கும்,
ரிலையன்ஸ் உபயோகிப்பாளர் அம்பானியை மகிழ்ச்சியாக்குகிறார்,
ஏர்டெல் லில் பேசினால் மிட்டலுக்கு தெம்பு,
டோகோமா வில் பேசுவது டாடாவை வளமாக்கும்.
ஆனால் ஒரு பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர் மட்டுமே தேசத்திற்கு
செல்வத்தை தேடித்தருகின்றார்.
ஆகவே பி.எஸ்.என்.எல் சேவையை பயன்படுத்துங்கள். . .
இந்த விளம்பரத்தை அளித்துள்ளது பி.எஸ்.என்.எல் நிர்வாகம் அல்ல.
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம்.
இடது சாரி தொழிற்சங்கங்களை எப்போதும் திட்டிக் கொண்டிருப்பவர்களே, இப்போது புரிந்து கொள்ளுங்கள்,
தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு பாதுகாப்பாக,
காவல் அரணாக இருப்பது தொழிற்சங்கங்கள்தான்.
அதுவும் இடதுசாரி தொழிற்சங்கங்கள் மட்டும்தான்.
இந்த விளம்பரம் பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்த, நாசமாக்கிய,
சிதைத்து வருகின்ற காங்கிரஸ், பாஜக விற்கு சமர்ப்பணம்
ராமன் அவர்களே! பி.எஸ் என் எல் நிர்வாகம் சரியில்லையே. pendrive modem unlimited வாங்கப் போனேன் .மாதம் 1200 ரூ. ஆறு மாதமுன்பணமாக கட்டுவதானால் 4200 ரூ.அதவது மாதம் 700 ரூ யில் பி.எஸ் என் எல் மூலம்பெறலாம்.ஏர்டெல்,ஐடியா,டாடாஎல்லருமாக சேர்ந்து பி.எஸ் என் எல் நிர்வாகதைப் பார்த்தார்கள். இப்பொது அந்த திட்டம் கைவிடப்பட்டுவிட்டது.. வழ்த்துக்களுடன் ---காஸ்யபன்
ReplyDelete