Wednesday, June 15, 2011

இரண்டு லட்ச ரூபாயோடு இறந்து போனவன் சொன்ன செய்தி என்ன?

இன்று டைம்ஸ் ஆஃப்  இந்தியா நாளிதழில்  வெளி வந்த செய்தி இது. ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர்  நகரில்  ஒரு பிச்சைக்காரன்  இறந்து 
போயிருக்கிறான். அழுக்கான உடைகளுடன் நைந்து போன பை 
ஒன்றோடு  துர் நாற்றத்தோடு  காணப்பட்ட  அந்த மனிதன் பற்றி 
யாருக்கும்  தெரியவில்லை, சக  பிச்சைக்காரர்களுக்குக் கூட. 


போலீஸ்  அவன் யார் என்று அறிந்து கொள்ள பாண்ட் பாக்கெட்டை
சோதனை போட்ட போது  அதிலே 1500  ரூபாய் இருந்ததாம். பிறகு
அந்த நைந்து போன பையைப் பார்த்தால்  அதிலே ஆயிரம் ரூபாய்,
ஐநூறு  ரூபாய் நோட்டுக்களாக  இரண்டு லட்சம் ரூபாய்  இருந்ததாம்.


அச்செய்தி அறிந்த பின் இவர் எனது உறவினர் என்று பலரும் 
மொய்த்தாலும்  யாருக்கும்  பெயரைக் கூட சொல்ல 
முடியவில்லையாம்.இப்போது காவல்துறையிடம் உள்ள
அந்தப் பணம்   பின்பு  அரசு கஜானாவிற்கு சென்று விடுமாம்.


இச்சம்பவம் பல சிந்தனைகளை  எழுப்பியது. 


இரண்டு லட்சம் ரூபாய் பணம் இருந்தும்  தனது நோய்க்குக் கூட
சிகிச்சை பார்க்கவில்லை. பிறகு எதற்கு அந்த பணம்?


பிச்சைக்காரர்களிடம் லட்சக்கணக்கில் பணம் உள்ளதாக
வரும் நகைச்சுவை எல்லாம் உணமைதான் போலும்?


இரண்டு லட்ச ரூபாய் பணம் இருந்தும்  அது அவனுக்கு 
பயன்படவில்லை. கோடிக்கணக்கில்  பணம் சுருட்டி 
வெளிநாட்டில்  பதுக்கி வைக்கும் பணத்தை  நம் 
அரசியல்வாதிகளால்  அனுபவிக்கவே முடியாத போது
எதற்காக விழுந்து விழுந்து ஊழல் செய்கின்றார்கள்? 


பிச்சைக்காரனின் பணம் அரசு கஜானாவிற்கு செல்கிறது.
அரசு கஜானா பணம் அரசியல்வாதிகளுக்கு வருகிறது.
இவர்களில்  உயர்ந்தவர்  யார்?   

No comments:

Post a Comment