Monday, June 6, 2011

மருத்துவ மாணவர்களின் தற்கொலை - மனதை தொட்ட கவிதை

சண்டிகரில் தலித் மாணவன் ஒருவன் தேர்ச்சி பெறக்கூடாது என்று
மதிப்பெண்களை குறைத்து அவனை தற்கொலை செய்ய வைத்த கொடூரம்  பற்றி  05.08.2011   அன்று  ஒரு பதிவிட்டிருந்தேன். 

அக்கொடுமை பற்றி 
மதுரை  பாரதியின்  கவிதை  இங்கே  உங்களுக்காக


மேல் வர்ணத்திற்கு மட்டும் 
கூர்மதி  என்ன 
குத்தகையா ? 
கட்டை விரலில் ஆரம்பித்து
கழுத்திற்கு  வந்தது
துரோணரின்  துரோகம் . . .
ஜஸ் பிரீத்சிங் , பாய் முகுந்தின் 
பாழும்  உயிரை  மாய்த்தது
மனுவின் மாய்மாலம் . . .  

 
   

1 comment:

  1. இன்னும் இந்த எண்ணங்கள் அவர்களிடையே இருக்கதான் செய்கிறது. இதை நான் வேறுவடிவத்தில் மிக சமீபத்தில் பார்த்தேன். கட்டை விரலை கொடுப்பதால்தான் அவர்கள் கேட்கிறார்கள்.

    விதியை மாற்றி எழுதுவோம். கற்பித்தலுக்கு காணிக்கை கற்றதை பயன்படுத்த கூடாது என்றால் அப்படிபட்டவனை நாம் ஓதுக்கி வைப்போம்.

    ReplyDelete