Friday, June 17, 2011

இடதுசாரி எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு

இன்று தீக்கதிர் நாளிதழில்  வந்துள்ள  அருமையான கட்டுரை.  மார்க்சிஸ்டுகள் வீழ்த்தப்பட்டதாக  கனவு காணுபவர்களே, நாங்கள் 
முன்னைக்காட்டிலும்   வேகமாக, வலிமையாக, உறுதியோடு 
வருவோம்  என்று  சொல்கின்றார், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் 
தலைமைக்குழு  உறுப்பினர் தோழர் கே.வரதராஜன். 
  

வங்கத்தில் வரலாறு திரும்பும்
-கே.வரதராசன்
அண்மையில் நடந்துமுடிந்த சட்டமன் றத் தேர்தலில் மேற்குவங்கத்தில் இடது முன் னணிக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, உற்சாகமடைந்துள்ள முதலாளித்துவ ஊட கங்கள், இனி இந்தியாவில் இடதுசாரி களுக்கு எதிர்காலம் இல்லை என்று புழுதிப் புயலை கிளப்பிவிட்டு வருகின்றன. சோவி யத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டபோதும் உலக அளவில் இத்தகைய பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆனால் முதலாளித்துவ உலகில் தற்போது ஏற்பட் டுள்ள நெருக்கடி, முதலாளித்துவத்தால் மனிதகுலத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதையும் சோசலிசமே உலகின் எதிர்காலம் என்பதையும் மெய்ப் பித்து வருகின்றன.

மேற்குவங்க தேர்தல் முடிவுகளை பரி சீலனை செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மத்தியக்குழு, அரசியல் மட்டத்திலும், ஸ்தாபன மட்டத்திலும் நேர்ந்த தவறுகளை திருத்திக்கொள்ளும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகளை வரை யறை செய்துள்ளது. அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள தோல்வியானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், இடது சாரிகளையும் அரசியல் ரீதியாக துடைத் தெறிந்துவிட்டது என்ற திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரத்தை மத்தியக்குழு நிராகரித்துள்ளது.

மேற்குவங்கத்தில் ஏற்பட்டுள்ள தோல்வி யை முதலாளித்துவ ஊடகங்களும் முதலா ளித்துவ பொருளாதார உபாசகர்களும் கொண் டாடுவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் தம்மை ஒரு இடதுசாரி விமர்சகர் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் அ. மார்க்சும் இத்தகைய பிரச்சாரத்தில் இறங்கி யுள்ளதுதான் வியப்பளிக்கிறது. ஜூனியர் விகடன் ஏட்டில் “மேற்குவங்கம்.. மார்க்சிஸ்ட் கட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற தலைப்பில் இரு கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அவர் தனது கட்டுரையை முடிக்கும் போது, இடது முன்னணி அரசின் வீழ்ச்சி வர வேற்கப்படவேண்டியது என்றாலும், நிச்சய மாக அது மகிழ்ச்சிக்குரிய ஒன்றல்ல, என்று குறிப்பிட்டிருக்கிறார். இடது முன்னணி அரசு மீண்டும் வெற்றி பெறாதது இவருக்கு வர வேற்கப்பட வேண்டிய ஒன்றாக தெரிகிறது. இதிலிருந்தே இவரது முகவிலாசத்தை புரிந்து கொள்ளமுடியும்.

சட்டமன்றத் தேர்தலில் இடதுமுன்னணி அடியோடு வீழ்ந்துவிடவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட கூடுதல் வாக்குகளை பெற்றிருக்கிறது. இந்தத் தேர்த லில் 1 கோடியே 95 லட்சம் வாக்குகளை இடதுமுன்னணி பெற்றுள்ளது. இது பதிவான வாக்குகளில் 41 சதவீதமாகும்.

மார்க்சிஸ்ட்டுகள் பெருமையடித்துக் கொள்ளும் நிலச்சீர்திருத்தம், குத்தகைதாரர் களின் உரிமையை நிலைநாட்டும் ஆபரே ஷன் பர்கா, விவசாய கூலிகளுக்கு குறைந்த பட்ச கூலி நிர்ணயம் முதலிய கனவுகள் நனவாகின என்று அ.மார்க்ஸ் போகிற போக்கில் கூறியுள்ளார்.

இந்திய அளவிலும், முதலாளித்துவக் கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்யும் பிற மாநிலங்களிலும் நிலச்சீர்திருத்தம் எந்தள விற்கு புறக்கணிக்கப்பட்டது என்பதோடு ஒப்பிடும்போதுதான் மேற்குவங்கத்தில் இடதுமுன்னணி அரசால் நிகழ்த்தப்பட்ட நிலச்சீர்திருத்தத்தின் மேன்மையை புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா முழுவதும் உபரி நிலமாக அறி விக்கப்பட்டது 73லட்சத்து 35ஆயிரம் ஏக்கர். இதில் கையகப்படுத்தப்பட்டது 64லட்சத்து 96ஆயிரம் ஏக்கர். இதில் விவசாயத்திற்கு பிரித்துக்கொடுக்கப்பட்டது 54 லட்சத்து 2 ஆயிரம் ஏக்கர். இதில் மேற்குவங்கத்தில் இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் 11லட் சத்து 30ஆயிரம் ஏக்கர் நிலம் 30.4லட்சம் ஏழை விவசாயிகளுக்கு பிரித்துக்கொடுக்கப் பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் பகிர்ந்த ளிக்கப்பட்ட மொத்த நிலத்தில் 24 சதவீத நிலம் மேற்குவங்கத்தில் மட்டும் பகிர்ந் தளிக்கப்பட்டுள்ளது. இதனால் பலன் பெற்ற வர்களில் 64 சதவீதம் பேர் தலித்துகள், பழங் குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த விவசாயிகள் ஆவர்.

இதனால் மேற்குவங்க கிராமப்புற மக்க ளில் 90 சதவீதம் பேருக்கு நிலம் கிடைத்துள் ளது. பண மதிப்பீட்டின்படி பார்த்தால் இந்த நிலச்சீர்திருத்தத்தின் விளைவாக 1,30,000 கோடி ரூபாய் பணக்காரர்களிடமிருந்து ஏழைகளுக்கு கைமாற்றிவிடப்பட்டுள்ளது.

இதனால் மேற்குவங்க கிராமங்களின் முகத்தோற்றமே மாறியது. தேசிய அளவில் விவசாய வளர்ச்சி விகிதம் 2.1 சதவீதம் மட்டுமே இருந்த நிலையில், மேற்குவங்க விவசாய வளர்ச்சி விகிதம் 3.1 சதவீதமாக உயர்ந்தது. நாட்டின் மொத்த அரிசி உற்பத்தி யில் மேற்குவங்கத்தின் பங்கு 16 சதவீதமாகும். அரிசி உற்பத்தியிலும் காய்கறி உற்பத்தி யிலும், மேற்குவங்கமே நாட்டில் முதலிடம் வகித்தது.

விவசாயிகள் வாழ்வில் மட்டுமின்றி விவசாய உற்பத்தியிலும் மலர்ச்சியை ஏற் படுத்தியது மேற்குவங்க இடதுமுன்னணி அர சின் நிலச்சீர்திருத்தம். இது பெருமையடித் துக்கொள்வதற்காக கூறப்படும் சாதனை அல்ல. நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறாத சாதனை.

இதே போன்று குத்தகை விவசாயிகளின் நலனும் வேறெந்த மாநிலத்தையும் விட மேற்குவங்கத்தில் முழுமையாக பாதுகாக்கப் பட்டது. அந்த மாநிலத்தில் 1977ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான இடதுமுன்னணி அரசு ஆட்சிக்கு வந்தபோது பதிவு செய்யப்பட்டிருந்த குத் தகை விவசாயிகளின் எண்ணிக்கை 5லட் சத்திற்கும் குறைவே ஆகும். இடது முன்னணி ஆட்சியில் 15லட்சத்திலிருந்து 20 லட்சம் வரை குத்தகை விவசாயிகள் பதிவு செய்யப் பட்டதாக சமூக அறிவியல் ஆய்வு மையம் ஒன்று நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந் துள்ளது.

ஆனால், இந்த உண்மையை மறைத்து மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு மட்டுமே நிலம் வழங்கப்பட்டது என்று பொய்ப்பிரச்சாரம் செய் யப்படுகிறது. எதையும் விபரத்தோடு எழுது வதாகக் கூறிக்கொள்ளும் அ.மார்க்சும் வழி மொழிந்திருப்பது அவரது நேர்மையை பறை சாற்றுவதாக இல்லை.

மேற்குவங்கத்தில் முஸ்லிம்கள் நிலை குறித்து சச்சார் குழு வெளியிட்ட விபரத்தை மார்க்சிஸ்ட் கட்சி அப்போதே மறுத்துள்ளது. மேற்குவங்கத்தில் மதக்கலவரங்களே நடை பெறவில்லை என்பதை அ.மார்க்ஸ் ஒத்துக் கொண்டுள்ளார். நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் முஸ்லிம் களுக்கு இடஒதுக்கீடு வழங்க மத்தியஅரசு மறுத்த நிலையிலும் மேற்குவங்க இடதுமுன் னணி அரசு, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 53 பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வி மற் றும் அரசு வேலைவாய்ப்பில் 10சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

சிறுபான்மை மக்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறுபான்மையினரின் பன் முக வளர்ச்சித்திட்டங்களுக்கு 2010ம் ஆண் டில் ரூ.264 கோடி செலவிடப்பட்டது. இந்தியா விலேயே இதுதான் அதிகமான தொகை யாகும். மேற்குவங்க சிறுபான்மை வளர்ச்சி மற்றும் நிதிக்கழகம் முஸ்லிம் மக்களுக்கு நுண்நிதி மற்றும் நீண்டகாலக் கடன்களை வழங்கியுள்ளது. இதனால் பலன்பெற்றவர்கள் 1கோடியே 8லட்சம் பேர் ஆவர்.

1977ம் ஆண்டில் 238 மதரசா பள்ளிகளே இருந்த நிலையில், 2010ம் ஆண்டில் 605 பள்ளிகளாக உயர்ந்தன. மதரசா பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 4ஆயி ரத்திலிருந்து 4.7லட்சமாக உயர்ந்தது. அனைத்து துவக்கப்பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களில் 30சதவீதம் பேர் முஸ்லிம் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள். உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இந்த எண்ணிக்கை 21 சதவீதமாக உயர்ந்தது.

எதிர்க்கட்சியினரை போட்டியிடவிடாமல் தடுப்பது, எதிரணிக்கு வாக்களிக்கக் கூடிய வர்களை வாக்குச்சாவடிக்கே வரவிடாமல் செய்வது என்ற நிலை இடதுமுன்னணி ஆட் சிக்காலத்தில் ஏற்பட்டதாகவும் அ.மார்க்ஸ் கூறியுள்ளார். இதுவும் முதலாளித்துவ ஊட கங்களால் அடிக்கடி சுமத்தப்படும் அழுக் கான அவதூறுதான். இது உண்மை என்றால் நாடாளுமன்றத் தேர்தலிலும் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் எதிர்க்கட்சி யினர் எப்படி வெற்றிபெற முடிந்தது. மக்க ளின் தொடர்ச்சியான ஆதரவுடன் தான் 34 ஆண்டுகாலம் இடதுமுன்னணி உலக வர லாற்றில் ஒரு சாதனையாக மேற்குவங்கத் தில் ஆட்சிபுரிய முடிந்தது. இந்த சாதனை யை மலிவான குற்றச்சாட்டுகளால் மறைத்து விடமுடியாது.

ஜனநாயகம் முழுமையாக செயல்படுத் தப்படவேண்டும் என்பதில் இடதுமுன் னணி அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட் டது. மாநில அரசின் பட்ஜெட் தொகையில் 50 சதவீதம் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பயன்படுத்தப்பட்டன. பஞ்சாயத்து ராஜ் சட் டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பே உள் ளாட்சி தேர்தல்கள் முறையாக காலக்கிரமத் தில் நடத்தப்பட்டன.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மேற்குவங்கத்தில் 600க்கும் மேற்பட்ட தோழர்கள் திரிணாமுல்-மாவோயிஸ்ட் குண் டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களது பெயர், ஊர் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு கட்சியைச் சேர்ந்த 14 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கட்சி மற்றும் வெகுஜன அலுவலகங்கள் கைப்பற்றப்படுகின்றன. அ.மார்க்ஸ் வரவேற் றுள்ள ஆட்சி மாற்றத்தின் லட்சணம் இது தான்.

இடதுமுன்னணி ஆட்சியில் மேற்கு வங்க மாநிலம் ஏகாதிபத்திய எதிர்ப்பின் கூர் முனையாக விளங்கியது. இடதுமுன்னணி ஆட்சியை அகற்றவேண்டும் என்பதில் ஏகா திபத்தியம் தொடர்ந்து முனைப்பாக இருந்து வந்தது. 34 ஆண்டுகளுக்கும் மேலாக இடது சாரிகளின் தலைமையில் ஒரு அரசு நீடிப் பதை முதலாளிவர்க்கத்தாலும் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் பின்னணி யில் தான் ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ளது.

அனுபவங்களை அடி உரமாக்கி, படிப்பி னைகளை படிக்கட்டுகளாக்கி மேற்கு வங்கத்தில் இடதுசாரி இயக்கம் எழும். 34 ஆண்டுகால ஆட்சியின்போது மக்களுக்கு கிடைத்த பலன்களை பாதுகாக்கும் போராட் டங்களை வலுவுடன் முன்னெடுத்துச் செல் லும். அவதூறுகளை முறியடித்து முன்னே றும். வங்கத்தில் வரலாறு திரும்பும்.

No comments:

Post a Comment