Tuesday, June 21, 2011

ஆண்களின் குற்றமா ? ஆட்சியின் குற்றமா?

உத்திரப் பிரதேச  மாநிலத்தில்  கிட்டத்தட்ட இரண்டு  நாட்களுக்காக 
நான்கு தலித் பெண்கள்  பாலியல்  வன்முறைக்கு  உட்படுத்தப் பட்டுள்ளனர்.


அதிலே  ஒருவர் இறந்து போயுள்ளார். ஒருவர் கண்களில் கத்தியால் 
குத்தப்பட்டு  பார்வையிழந்துள்ளார்.  வக்கிரம்  பிடித்த  மிருகங்களின் 
வெறிச்செயல்.  மிக மிகக் கடுமையான அளிக்கப்பட வேண்டிய செயல் இது. 

மாயாவதி  உடனடியாக  பதவி விலக வேண்டும்  என்ற குரல் இப்போது 
எழுந்துள்ளது.  இதிலேதான்  எனக்கு  சில சந்தேகங்கள். 


அரசு அதிகாரிகளோ  அல்லது  அவரது  அமைச்சரவை  சகாக்களோ, 
சட்ட மன்ற உறுப்பினர்களோ  ஏன்  அவரது  கட்சிக்காரர்களோ  இந்த
இழி செயலை  செய்திருந்தால்  அவர் பொறுப்பேற்று  பதவி  விலகுவது
சரியாக  இருக்கும். அல்லது  இந்த கொடுமைக்கு காரணமான கேவலமான
குற்றவாளிகளை பாதுகாக்க  அவரது  அரசு முயன்றால்  பதவி விலகு 
என்று கோருவது  மிக மிக நியாயமாகவே  இருக்கும். 


ஆனால் குற்றவாளிகளை  கைது செய்து சிறையில் அடித்த பின்பும் பதவி
விலகு  என ஊடகங்கள்  முழங்குவதில்  உள் நோக்கம் இருப்பதாகவே நான்  பார்க்கிறேன். ஊடகங்களை தூண்டி விடுவதில்  தற்போது கைது 
நாடகம்  ஆடிய காங்கிரஸ் இளவரசனுக்கு  என்ன பங்கு என்று தெரியவில்லை. 


மாயாவதிக்கு  நான் நிச்சயமாக வக்காலத்து  வாங்கவில்லை.  அவருடைய  அணுகுமுறை குறித்தும்  ஊழல்  குறித்தும்  கடுமையான 
விமரிசனங்கள்  உண்டு. மத்தியரசுக்கு  ஆபத்து  வந்த போது  முட்டு கொடுத்ததற்காக  தாஜ் காரிடார் வழக்கை நீர்த்துப் போகச்செய்தது 
காங்கிரஸ் கட்சி  என்பதையும் நான் மறக்கவில்லை. 


மத்தியஅரசின் உள்துறை  அமைச்சகம்  வெளியிட்ட குற்றப்பதிவுகள் 
அறிக்கையின் படி  2009 ம்  ஆண்டு  அதிகமான பாலியல் வன்கொடுமை 
வழக்குகள்  பதிவானது  பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில்( 14 %).
பெண் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை அதிகமாக நடந்ததும் 
பாஜக ஆளும் சத்திஸ்கர் மாநிலத்தில்தான் (25 .06 ). 35 மாநகரங்களில்  
என்று  எடுத்துக் கொண்டால்  காங்கிரஸ்  ஆளும் புது டெல்லியில் தான்
அதிகம் (23 . 8 )
 

அந்த  மாநில முதல்வர்களை பதவி விலகச்சொல்லி விட்டு பிறகு 
மாயாவதியிடம் வரலாமே!  
     

1 comment: