Tuesday, June 28, 2011

கொடியவர்களின் கூடாரமாகிப் போனது கோயில் ,மஞ்சுநாதா! மஞ்சுநாதா!!





எத்தனுக்கு எத்தன், ஏமாற்றுப் பேர்வழிக்கு ஏமாற்றுப் பேர்வழி, 
விடாக்கண்டனுக்கு  கொடாக்கண்டன் - எப்படி  வேண்டுமானாலும் 
அழைக்க முடியும். எட்டியூரப்பாவும் குமாரசாமியும் நடத்திய 
கீரி பாம்பு நாடகத்தைதான்  சொல்கிறேன். 
தர்மஸ்தலா மஞ்சுநாதர் ஆலயத்தில்  சத்தியம் செய்வாயா  என 
எட்டியூரப்பா சவால் விடுக்க, அதற்கு குமாரசாமி பதில் சவால் விட,
சட்டமன்றத்திலும் கர்நாடக மாநில மேடைகளிலும்  நடக்கும் 
நாடகத்தின்  புதிய மேடையாக கோயில் மாறிப்போனது. 


இறுதியில்  எவரும் சத்தியம் செய்யவில்லை. இருவருமே 
பொய்யர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்திக் 
கொண்டனர். 


கோயிலில்  சத்தியம்  என்று மூட நம்பிக்கையை வளர்க்கும் 
கருவிகளாக இவர்கள் இருப்பதுதான் வேதனை. இவர்களின் 
வெட்டி மோதலால்  பக்தர்கள் அவதிப் பட்டதுதான் மிச்சம்.
மஞ்சுநாதர்  எங்கே போய் ஒளிந்து கொண்டாரோ?

3 comments:

  1. அவர்களுக்கு தெரியும் சிலை ஒன்றும் செய்யாது என்று.

    ReplyDelete
  2. இவர்கள் நாடகத்தை வெளியில் போட்டது காணாதா?

    ReplyDelete
  3. ராமன் அவர்களே !" அடேய் ! பூசாரி அது பேசாது ! கல் !" என்று வசனம் எழுதியவர் தான் நமது மஞ்சள் துண்டு மகா ஸ்வமிகள். யொகா குரு, சிரி சிரி தாடி,யஜுர் மந்திர், என்ன செய்ய! அரண்மனைல பேயொட்ட போனா செங்கல் பூரா பிடாரியா மாறிவிட்டது.வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

    ReplyDelete