Wednesday, August 3, 2016

அவரின் அரசியல் எரிச்சலூட்டும், ஆனால்

கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய “ஊழியின் தினங்கள்” கவிதை நூலை கடந்த வாரம்தான் படித்தேன். வரலாறு காணாத சென்னைப் பெருமழை, தமிழகத்தை உலுக்கிய வேளையில் எழுதப்பட்ட இக்கவிதைகள் மனதில் நீங்காத வலியை ஏற்படுத்தி விடுகிறது. பல்வேறு கோணங்களில் வெள்ளத்தின் பாதிப்பை எழுதியுள்ளார். அழுத்தமாக எழுதப்பட்ட ஒவ்வொரு கவிதையும் தாளாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. என்னை மிகவும் ஈர்த்த கவிதைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

அத்தனையையும் தட்டச்சு செய்வதற்கான நேரமின்மையால் ஸ்கேன் செய்துள்ளேன். கவிதைகளை படித்து முடித்த பின்பு கடைசியாக எழுதியதையும் படித்து விடுங்கள். தலைப்பு ஏன் என்று புரிய வேண்டுமல்லவா?

சென்னை பெருமழைக்கு முன்பே எழுதப்பட்டதாம் இக்கவிதை. கடலூரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அப்படித்தான் நிகழ்ந்தது. கவிதையில் சொல்லப்பட்ட அத்துணை வரிகளையும் பத்து பேரை பலி வாங்கிய பெரிய காட்டுப்பாளையத்தில் நான் பார்த்தேன்.


ஆனால் சென்னையில் அது பின்னர் நிகழ்ந்தது பெருந்துயரம். கவிஞனின் தீர்க்க தரிசனத்துக்காக மகிழ்வதா இல்லை இப்படிப்பட்ட நிலைக்கு இயற்கையை விட இன்னும் அதிகமாக காரணமாக இருந்த அரசை நொந்து கொள்வதா? பட்டும் திருந்தாமல் மீண்டும் உட்கார வைத்த மக்களை நினைத்து கோபப்படுவதா?

சென்னை நகரத்தின் கூட்டு மனதின் சொற்கள் என்று சொல்வது மிகவும் சரிதான் என்பதை பின் வரும் கவிதைகள் உணர்த்தும்.
சென்னை வெள்ளம் குறித்து ஆட்சியாளர்களை விமர்சித்து ஆயிரம் கவிதை எழுத முடியும் என்றாலும் இத்தொகுப்பில் இரண்டு கவிதைகள் மட்டுமே. அவை இங்கே 
மனுஷ்யபுத்திரன் ஒரு அரசியல்வாதியாக எரிச்சலூட்டுபவர். மக்கள் நலக் கூட்டணி மீதான அடாவடி விஷமப் பிரச்சாரத்திற்கு அடித்தளமே இவர்தான். ஆனாலும் ஒரு கவிஞராக கண்டிப்பாக ஈர்க்கிறார்.உயிர்மை பதிப்பக ஸ்டாலில் இந்நூலை வாங்குகையில் அவர் அங்கேதான் இருந்தார். இப்புத்தகத்தில் அவரது கையெழுத்தை வாங்கியிருக்கலாமோ என்று இப்போது தோன்றியது நிஜம்.

கவிதைக்கு பொய் அழகு என்பார்கள்.

இவரது கவிதைகளில் உண்மை இருப்பதும்
அரசியலில் பொய் இருப்பதும்
மிகப்பெரிய முரண்நகை.

8 comments:

 1. உங்களுக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு உள்ளது போல் அவருக்கு ஒன்று. அதில் என்ன பொய் உள்ளது.? கம்யூனிஸ்ட் கட்சி என்ன தவறே செய்யாத தங்கமே... தா.பாண்டியன் மற்றும் பலரும் ஜெ வின் அராஜக ஆட்சிக்கு எப்போதும் ஜால்ரா தானே..

  ReplyDelete
 2. //மக்கள் நலக் கூட்டணி மீதான அடாவடி விஷமப் பிரச்சாரத்திற்கு அடித்தளமே இவர்தான்//

  சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் கட்டவிழ்த்து விட்ட பொய்களைப் பற்றி உங்களுக்கு தெரியாவிட்டால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது.

  தா.பாண்டியனை ஒரு கம்யூனிஸ்டாக என்றுமே நான் ஏற்றுக் கொண்டது கிடையாது என்பது எனது பதிவை தொடர்ந்து படிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்

  ReplyDelete
 3. bro

  write a book about who is communist.....

  already all are in endangered species.....

  ReplyDelete
  Replies
  1. கம்யூனிஸ்டுகளைப் பற்றி, அவர்களின் தியாகங்கள் பற்றி, போராட்டங்கள் பற்றி ஆயிரமாயிரம் நூல்கள் உள்ளது. அவர்களை அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள். கம்யூனிஸ்டுகள் உங்களைப் போல முகத்தை ஒளித்து வைத்துக் கொள்ளும் அனாமதேயக் கோழைகள் அல்ல.

   Delete
 4. கம்யூனிச எண்ணம் ஒவ்வொரு மனிதனிடமும் எப்போதும் உறங்கிக் கொண்டோ அல்லது விழித்துகொண்டோ தான் இருக்கிறது. இது இல்லையென்றால் இவ்வுலகம் எப்போதோ அழிந்திருக்கும். கம்யூனிஸ்டுகளிடம் சுயநலமில்லாமலில்லை. சுயநலமிகளிடம் கம்யூனிசம் இல்லாமலில்லை. சென்னையில் வெள்ளம் வந்த போது எல்லோரும் சென்னைக்கே நிவாரணப் பொருட்களை அனுப்பிகொண்டிருந்தார்கள். மோசமாக பாதிக்கப்பட்ட கடலூரை மீடியாவும் மக்களும் கண்டு கொள்ளவே இல்லை. எங்கள் ஊரில் ஒரு தோழர்தான் முன்னின்று நிவாரணம் சேகரித்தார். அவரிடம் நான் நிவாரணம் வழங்கும் போது கடலூருக்கு அனுப்புவதாயிருந்தால் தருவதாகவும் நானும் அவர்களுடன் வருவதாகவும் சொன்னேன். மக்களின் பிரச்சினைகளில் முதலில் நிற்பது அவர்தான். ஆனால் மக்கள் அவர்களுக்கு ஓட்டு மட்டும் போட மாட்டார்கள்.இதில் ஏதோ குறைபாடுள்ளது. நாங்கள் நிறைய விவாதித்திருக்கிறோம் இதைப் பற்றி. வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட அதே சென்னை மக்கள் தான் தேர்தலின் போது மிகச் சிறப்பான ஓட்டுப்பதிவினை பதிவு செய்தார்கள். குறிப்பு நான் கம்யூனிஸ்ட் அல்ல மற்ற கட்சியை சார்ந்தவனும் அல்ல.நடுநிலையானவனும் அல்ல. வழக்கம் போல குழப்பமான பின்னூட்டம் காம்ரேட். விஜயன்

  ReplyDelete
 5. இவ்ளோ கோவமா தோழரே. உங்க பதிவ 'பொறுமையா" படிச்சு பதில் எழுதியிருக்காரு. அவரப் போயி. உங்க பதிவ அடுத்தவங்க படிக்கிறதே உங்களுக்கு வெற்றிதானே.அய்யா நல்லக்கண்ணுவ பார்த்தா அப்டி தெரியலையே. விஜயன்

  ReplyDelete
  Replies
  1. குழப்பமா எழுதறீங்கன்னு சொன்னா கோபப்படறீங்க விஜயன் சார். ஆனா இங்க அனானியும் சரி நானும் சரி எழுதினது தா.பா பற்றி. நீங்க தோழர் நல்லக்கண்ணுவை கொண்டு நுழைக்கிறீங்க. தியாக அரசியலுக்கு அடையாளமாக தமிழகத்தில் இன்று இருப்பது தோழர் சங்கரய்யாவும் தோழர் நல்லக்கண்ணுவும். கம்யூனிச எதிரிகளால் கூட மறுக்க முடியாத உண்மை இது

   Delete
 6. தேர்ந்தெடுத்த கவிதைகள் அருமை. முழு நூலின் இணைப்பு உள்ளதா?

  ReplyDelete