Wednesday, August 3, 2016

ஆமா, அதை ஹிலாரியே சொன்னாங்களா?




புரட்சித் தலைவி, இதய தெய்வம், டாக்டர் அம்மாவைப் பாத்துதான் ஹிலாரி கிளின்டனுக்கு எழுச்சி, அறிவு, வேகம் எல்லாம் வந்து அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அடித்து விட்ட அதிமுக எம்.எல்.ஏ வின் விசுவாசத்துக்கு அளவே இல்லையா? 

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க என்று வாங்கிய காசை விட அதிகமாக கூவியவனையே மிஞ்சி விட்டீர்களே.

அம்மாவைத்தான் அமெரிக்க ஜனாதிபதியா நிக்கச் சொன்னாங்க, அவங்கதான் ஹிலாரியை நிக்கச் சொல்லி தைரியம் கொடுத்தாங்க என்றும் சொல்லியிருக்கலாமே.

ஜால்ரா அடிக்கறதுனு முடிவு எடுத்தாச்சு, அதுல எதுக்கு கொஞ்சமா கதை விடனும்? முடியறவரைக்கும் ஊத்தி விட வேண்டியதுதானே. ட்ப்ஸ்மாஷ் செய்யறவங்களை வைச்சு ஹிலாரியே பேசுன மாதிரி ரெடி பண்ண வேண்டியதுதானே!

இந்த ப்ராடு வேலையெல்லாம் செய்யத் தெரியலைனா, அதுக்குனே ஒரு எக்ஸ்பர்ட் இருக்காரு, அவரைக் கேளுங்க.

அதாங்க, மோடி
 

3 comments:

  1. sire,

    why not politicians crack the jokes....

    apperciate his humor.....

    ReplyDelete
  2. Paathu kizhavi defamation case potra poraa.

    ReplyDelete
    Replies
    1. நடந்தாலும் நடக்கும். இதுக்கெல்லாம் தயாராத்தான் இருக்கேன்

      Delete