பாட்டையா பாரதி மணி, அந்த கால அமிதாப், நம்பியார், ரஜனி ஸ்டைலில் கேங் லீடராக கலக்கும் குறும்படத்தை இந்த இணைப்பில் சென்று பார்த்து ரசித்து சிரியுங்கள்
அதற்கு முன்பாக அவர் அளித்துள்ள அறிமுகத்தையும் படித்து விடுங்கள்
காட்டேரி கும்பல் -- குறும்படம்!
எங்கள் சென்னை அரங்கத்தில்
எனக்கு முன்னேத்தி ஏராக செயல்படும் நண்பன் அம்ஜித் மணிமேகலைக்கு ஒரு தீராத
(ஆனால் நடக்காத) ஆசையொன்றுண்டு. அதாவது என்னை எப்படியும் ஒரு சூப்ப்பர்
ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்த்திவிடவேண்டும் என்பது தான்!
பிடிவாதமாக தன்
சொந்தக்காசைச்செலவழித்து ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக இந்த “காட்டேரி
கும்பல்” எனும் குறும்படத்தை தானே எழுதி இயக்கியிருக்கிறான் அம்ஜித்.
ஆண்டவன் அவனை காப்பாற்றுவாராக!
இந்தப்படத்தின் ஆரம்பதில் ஒரு Disclaimer வருகிறது:: "No animals have
been used or tortured during the shooting of this film except Actors"
எண்பது வயதான என்னை மூன்று இரவுகள் தூக்கமில்லாமல் ஆம்னி காரை பத்து
கிலோமீட்டர் ஓட்டச்சொன்னதற்கும், சம்மர் வேளையில் அந்த கருப்புக்கோட்டை
கழட்டவிடாமல் படுத்தியதற்கும் சித்திரகுப்தன் பேரேட்டில் என்ன தண்டனையென்று
பார்க்கவேண்டும்!
“காட்டேரி கும்பல்” எடுத்து சில மாதங்களானாலும்
உங்கள் பார்வைக்கு இப்போது தான் வருகிறது. It is a tounge-in-cheek,
feel-good Short Film.
என்னோடு என் நண்பர்களும் நடித்திருக்கிறார்கள். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம் சென்னை அரங்கத்தார்!
என்ன ஒரு கலக்கல். சூப்பர்
No comments:
Post a Comment