தொடர்ச்சியான பயணங்கள் காரணமாக இந்த வாரம் மறைந்த இரு திரையுலக ஆளுமைகள் பற்றி உடனடியாக எழுத
முடியாமல் போய் விட்டது.
பஞ்சு அருணாசலம் அவர்கள் பாடலாசிரியர், கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றில்
முத்திரை பதித்தவர். வெற்றிகரமான தயாரிப்பாளர், இயக்குனராகவும் இருந்தவர்.
எல்லாவற்றையும் விட அவர் பெரும்பாலானவர்களால் (என்னையும் சேர்த்து) இசை
ஞானி இளையராஜாவை அறிமுகம் செய்தவர் என்றே நினைவில் கொள்ளப்படுவார்.
இளையராஜாவை அறிமுகம் செய்த பெருமிதம் அவருக்கு உண்டெனிலும் நான் அறிமுகம்
செய்யாவிட்டாலும் வேறு யாராவது அறிமுகம் செய்திருப்பார்கள். அவ்வளவு திறமை கொண்டவர் இளையராஜா என்று இப்போதுதான் விகடனில் எழுதியிருந்தார்.
திரு பஞ்சு அருணாச்சலத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரால் அறிமுகம் செய்யப்பட்ட இளையராஜாவின் முதல் படத்துப் பாடலை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
அவரது தயாரிப்பான ப்ரியா படத்தில் வரும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். நிச்சயமாக உங்களுக்கும் கூட
இப்பாடல் மிகவும் இனிமையானது. காட்சிப்படுத்தலும் மிகவும் அழகாக இருக்கும்.
உணர்ச்சிகரமான இப்பாடல் வரும் இத்திரைப்படம் இவரது தயாரிப்பு என்பதை விகடன் கட்டுரை மூலமே அறிந்து கொண்டேன்.
இவ்வளவு அருமையான நடிகரை இப்படி மடை மாற்றி விட்டார்களே என்ற ஏக்கம் உங்களுக்கும் வரும்.
பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு எனது அஞ்சலி
மறைந்த மேதைக்கு சிறந்த அஞ்சலி! நன்றி!
ReplyDelete