Wednesday, August 24, 2016

பாகிஸ்தான் நரகமல்ல - சபாஷ் ரம்யா




அதானிக்கும் அம்பானிக்கும் தேவையென்றால் பாகிஸ்தானோடு மோடி இழைந்து உறவாடுவார். இந்தியாவில் சிக்கல் என்றால் வீர வசனம் முழங்குவார். அவரைப் போலவே அவர் கட்சிக்காரர்களும் அபத்தமாக உளறுவார்கள். அப்படித்தான் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், பாகிஸ்தான் ஒரு நரகம் என்று உளறினார்.

அப்படி ஒன்றும் பாகிஸ்தான் நரகம் அல்ல. பாகிஸ்தான் மக்கள் மிகவும் நல்லவர்கள். நான் பாகிஸ்தான் போன போது அன்பாகவே எங்களை நடத்தினார்கள் என்று எதிர்வினையாற்றினார் முன்னாள் எம்.பியும் திரைப்பட நடிகையுமான ரம்யா.

பொறுக்குமா பாஜக வின் ரௌடிக் கூட்டம்?

வழக்கம் போல தேசத்துரோகி என்று வசைபாடி மிரட்டி ஒரு வழக்கும் போட்டுவிட்டார்கள்.

ஆனால் அந்த மிரட்டலுக்கு அடிபணியாமல் என்னுடைய கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று ரம்யா மீண்டும் அறிவித்து விட்டார்.

சபாஷ் ரம்யா. பாராட்டுக்கள்.

இப்போது நீங்கள் நிஜமாகவே கதாநாயகியாக காட்சியளிக்கிறீர்கள்.

ஆனாலும் எச்சரிக்கையாக இருங்கள். குரைக்கிற நாய் கடிக்காது என்ற பழமொழியெல்லாம் காவிக் கூட்டத்திற்குப் பொருந்தாது. எந்த கீழ்த்தரமான செய்கைக்கும் தயாரானவர்கள். 

உங்கள் தைரியமும் அதனால் உங்களூக்குக் கிடைத்துள்ள ஆதரவும் உங்களை பாதுகாக்கும். 

6 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. இது எங்கள் நாடு. அண்டை நாடுகளுடன் தோழமையாக இருக்க முடியாத நீ வேண்டுமானால் எங்காவது ஓடிப் போ. இல்லையென்றால் அரபிக்கடலில் மூழ்கி செத்துப் போ

      Delete
  2. தோழர் ஏன் இந்த அநாகரீக அநாமதேயத்தை ஊக்குவிக்கிறீர்கள்.
    Please delete..

    ReplyDelete
    Replies
    1. அனாமதேயங்களின் அநாகரீகங்களை அம்பலப்படுத்த வேண்டுமல்லவா. அதற்குத்தான் தோழர். காவிகளைப் போல கடைந்தெடுத்த அநாகரீகப் பேர்வழிகள் யாரும் கிடையாது. இருப்பினும் நீங்கள் சொன்னது போல அதை அகற்றி விடுகிறேன்.

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நீ யார்? இன்னும் கூட கேட்கலாம். வேண்டாம். என் வலைப்பக்கத்திற்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது

      Delete