Tuesday, August 23, 2016

நேருவை எப்பய்யா தூக்குல போட்டாங்க?




"1857 ல் தொடங்கிய இந்திய சுதந்திரப் போராட்டம்  90 ஆண்டுகளுக்குப் பிறகு 1947 ல் முடிவுற்றது.  இந்திய சுதந்திரத்திற்காக போராடி வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட தியாகிகளான சுபாஷ் சந்திர போஸ், பண்டித நேரு, சர்தார் பட்டேல், பகத்சிங், ராஜ குரு ஆகியோரை நினைவு கொள்வோம்"

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே நேருவையும் பட்டேலையும் தூக்கில் போட்டு விட்டார்களா? அப்போது இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்தது யார்? 

சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்ததாக சொல்வது தவறு என்று ஒரு சர்ச்சை இருக்கிறது. அதுவும் சரியில்லையா? அவரையும் தூக்கில் போட்டுத்தான் கொன்றார்களா?

இப்படி எல்லாம் உங்களுக்கு கேள்வி வருகிறதா? 

சாரி, இக்கேள்விகளுக்கு என்னிடம் பதில் கிடையாது. 

அப்படியானால் ??

இந்த கேள்விகளை நீங்கள் கேட்க வேண்டியது வேறு ஒருவரிடம். 

யார் அவரா?

அதிர்ச்சி வேண்டாம் மக்களே. இதய நோயுள்ளவர்கள் அவர் யார் என்பதை தயவு செய்து படிக்காதீர்கள்.

முதலில் சொன்ன பத்தியில் உள்ளதைப் பேசியவர் 

திரு பிரகாஷ் ஜாவ்தேகர். 

சரி, அதனால் என்ன? ஏதோ உளறி விட்டார் என்று சொல்கிறீர்களா?

அய்யா, அவர் சாதாரணமான ஆள் அல்ல. பதவி உயர்வு பெற்று மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர். கல்விக்கெல்லாம் அவர்தான் பொறுப்பு. பல்கலைக்கழகங்கள் எல்லாம் அவர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. 

மோடிக்குத்தான் வரலாறு தெரியாதென்றால் அவர் மந்திரிக்கும், கல்வி அமைச்சருக்கே தெரியவில்லை. 

எல்லாம் வோட்டு போட்டாங்களே, அந்த புத்திசாலிங்க. அவங்களைச் சொல்லனும். 

இன்னும் ஒரு கூடுதல் தகவல். 

பாஜக கட்சித்தலைவர் அமித் ஷா மட்டும் என்ன சாதாரண ஆளா?

அஸ்ஸாம் மாநிலத் தேர்தலில் அம்மாநில மக்களை குஷிப்படுத்துவதற்காக 

அஸ்ஸாமின் அஹோம் ராஜ வம்சத்தை நிறுவிய சௌலங் சுகாஃபா முகலாய அரசர்களை எப்படி பதினேழு முறை தோற்கடித்தார் என்று வீரமாக விவரித்தார். 

இதிலென்ன செய்தி என்று கேட்கிறீர்களா?

சௌலங் சுகாஃபா அஹோம் ராஜ வம்சத்தை 1228 ல் ஸ்தாபித்து விட்டு 1268 ல் இறந்து போய் விட்டார். முகலாய ஆட்சியோ அவர் இறந்து 258 ஆண்டுகளுக்குப் அப்புறமாக பிறகு 1526 ல் முதலாம் பானிபட் போருக்குப் பிறகுதான் அமைக்கப்படுகிறது. 

3 comments:

  1. Their history knowledge is India's Tragedy

    ReplyDelete
  2. கொடுமை. இவனெல்லாம் கல்வி அமைச்சர். தூ....

    ReplyDelete
  3. என்ன செய்வது? இன்னும் மூன்று வருடங்கள் இதையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும். அடுத்த தேர்தலில் பாஜக பாடம் கற்கும். அதற்கு இப்படிப்பட்ட முட்டாள்கள் தேவை

    ReplyDelete