Friday, August 5, 2016

மோடி சோட்டா பிரதமர் - ஜெயமோகன்


ஜெய மோகன் – ஒவ்வொரு வார்த்தையும் திமிர், விஷம்

“தடம்” நேர்காணலை படித்துத் தொலைத்து விட்டேன். ஒரு மனிதன் எவ்வளவு தலைக்கனத்தோடும் திமிரோடும் ஒவ்வொரு சொல்லிலும் விஷத்தை தோய்த்து பிரயோகிக்க முடியும் என்பதற்கான உதாரணம் ஜெயமோகன் என்பதை அந்த நேர் காணல் வெளிச்சம் போட்டுக் காண்பித்து விட்டது.

ஐம்பது ரூபாய் செலவு செய்து “தடம்” வாங்க வேண்டுமா என்ற யோசனையில் இணைப்பு கிடைக்குமா என்று தேடிய போது டி.எம்.கிருஷ்ணாவிற்கு மகசேசே விருது கிடைத்ததை பொறுக்காமல் அவர் வெறுப்போடு வசை பாடியதை படிக்க நேர்ந்தது. “அவர் தகுதிக்கு டி.எம்.கிருஷ்ணா பற்றியெல்லாம் எழுதவே கூடாதாம்” என்பதை படிக்கையில் பின் என்ன இழவிற்கு எழுதினீர்கள் என்ற கேள்வி தானாக வருகிறதல்லவா? அவர் மிகவும் கூசிப் போனாராம். தகுதி வாய்ந்த ஒரு மனிதருக்கு தகுதியான விருது கிடைத்ததை, அவர் மோடியின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி வருகிறார் என்பதற்காக சிறுமைப் படுத்தி எழுதியதைப் படிக்கையில் இப்படியும் பொறாமை பிடித்த மனிதர்கள் இருக்கிறார்களே என்று எனக்கு மிகவும் கூசியது.

சரி “தடம்” நேர்காணலுக்கு வருகிறேன்.

வழக்கமாக இவர் வளவளவென்று காகிதத்திற்கு கேடாக எழுதிக் குவிப்பது போலவே அந்த பேட்டியும் அமைந்திருக்கிறது. அதனால் ஒவ்வொரு விஷயத்தையும் எழுதுவது  என் நேரத்திற்கு பிடித்த கேடாக அமையும். ஆகவே சில விஷயங்கள் பற்றி மட்டுமே.

ஏனைய தமிழ் இலக்கியவாதிகள் எல்லோரும் சோர்வுற்ற காலத்தை பிரதிபலித்தவர்களாம். இவர் மட்டும்தான் நம்பிக்கையை பிரதிபலிக்கிறார் என்று முதல் கோணலே முடிவு வரை கோணலாகி விட்டது.

Thamizhukku ezhuthuruve thaniyaaga vendaam enru oru apayakaramana alosanaiyai koduthu vittu

என்ன, ஏதாவது புரிந்ததா? தமிழுக்கு தனியாக எழுத்துரு தேவையில்லை, ஆங்கிலத்திலே எழுதினால் போதும் என்று விபரீதமான ஆலோசனையை கொடுத்து விட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட பின்பும் “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்” என்று நேர் காணலிலும் மூர்க்கத்தனமாகவும் மூடத்தனமாகவும் நியாயப்படுத்துகிறார்.

சிறு தெய்வ வழிபாட்டை இந்து மதக் கோட்பாட்டில் கொண்டு வரவும் ஆயிரமாயிரம் வருடங்களாக இந்து மதம் என்றுதான் உள்ளது என்றும் நிரூபிக்க போட்டு குழப்புகிறார். “வெள்ளைக்காரன் வந்து இந்து மதம் என்று பெயர் சூட்டினானோ, நாமெல்லாம் பிழைத்தோமோ” என்று சந்திரசேகரேந்திர சரஸ்வதி சொன்னது இவரது பேரறிவிற்கு எட்டவில்லை போலும்.

கம்ப ராமாயணத்தை நீட்டி அடித்தால் அறுபது பக்கம்தான் வருமாம். சிலப்பதிகாரம் பொன்னியின் செல்வனில் பாதிதான் வருமாம். எல்லாம் சரி சார். உங்கள் வெண் முரசு ஏன் பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் நீள்கிறது. மகாபாரதக் கதையைக் கூட ஒரு பக்க கதையாக, ஏன் பத்து செகண்ட் கதையாக மாற்றி விடலாமே? நீங்கள் ஏன் காகிதத்தை வீணடித்து எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். பாவம் உங்களுக்கு சத்தியம் செய்து கொடுத்த எட்டு நண்பர்கள். பாட்சா ரஜனி ஒரு முறை சொன்னா நூறு முறை போல, எட்டு பேர் படிச்சா உங்களுக்கு ஐம்பதாயிரம் பேர் படித்தால் போல.

இவரது “பின் தொடரும் நிழலின் குரல்” படித்துத்தான் லெனின் என்றால் யார் என்று  இவரது வாசகர்கள் பிறகு விக்கிபீடியாவை படித்து தெரிந்து கொண்டார்களாம். அடித்து விடுவது என்று முடிவு செய்த பிறகு ஏன் லெனின் என்று சோட்டா ஆட்களை சொல்கிறீர்கள். வெண் முரசு மூலமாகத்தான் அவர்களுக்கு மகாபாரதம் என்று ஒன்று இருப்பதாகவே தெரிந்து கொண்டார்கள் என்றே சொல்லி இருக்கலாமே. ஜெயமோகன் வாசகர்களே, உஷார், உங்களை ஒன்றுமே தெரியாத மரமண்டையர்கள் என்று உங்கள் ஆசான் வர்ணிக்கிறதாவது புரிகிறதா?

லெனின் மாஸ்கோ கல்லறையிலிருந்து எழுந்து வரப் போவதில்லை. ஆனால் மோடி அரசை, அதுவும் உங்கள் அரசை சோட்டா கவர்மெண்ட் என்று சொல்லி இருக்கிறீர்கள். அத்வானி கோஷ்டியை சேர்ந்தவர் என்றெண்ணி உங்களை தேசத்துரோக வழக்கில் உள்ளே போட்டு விடப் போகிறார். இந்த விபரம் கூட கிடையாதா உங்களுக்கு?

ஜெயமோகன் போல பக்கம் பக்கமாக எழுதினால் படிக்க மாட்டீர்கள். ஆகவே இடைவேளை நேரம் இது. மிச்ச கச்சேரியை நாளை தொடரலாம்.

5 comments:

 1. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரே பதிவில் ஜெயமோகன், மோடி இரண்டு பேருக்கும் குட்டு.

  ReplyDelete
 2. //இவரது “பின் தொடரும் நிழலின் குரல்” படித்துத்தான் லெனின் என்றால் யார் என்று இவரது வாசகர்கள் பிறகு விக்கிபீடியாவை படித்து தெரிந்து கொண்டார்களாம். //
  உண்மையில் ஜெமோ அப்படிச் சொன்னாரா என்பது ஆச்சரியம்தான்.. ஆனால் ஒரு சில மேட்டுக்குடிகள் அமெரிக்கவில் பிறந்த தமிழ்க்காரர்களை வைத்து அப்படிச் சொல்லியிருக்கலாம்... என்னைப் பொருத்தவரை நான் உங்களையும் ஜெமோவையும் முழுமையாக ஏற்காதவன்.. நன்றி
  பத்ரிநாத்

  ReplyDelete
  Replies
  1. //உண்மையில் ஜெமோ அப்படிச் சொன்னாரா என்பது ஆச்சரியம்தான்.. // தயவு செய்து தடம் பேட்டியை படிக்கவும்.

   என்னை முழுமையாக ஏற்கவில்லைஎன்பதை வெளிப்படையாகச் சொன்னதற்கு நன்றி. உண்மையிலேயே இந்த நேர்மை எனக்கு பிடித்திருக்கு

   Delete
 3. ஜெமோவையும் சேர்த்துத்தான் சொன்னேன்.. தங்களை மட்டுமல்ல... இரண்டுக்கும் சில வலுவான காரணங்கள் உண்டு

  ReplyDelete
 4. //...பின் தொடரும் நிழலின் குரல்” படித்துத்தான் லெனின் என்றால் யார் என்று இவரது வாசகர்கள் பிறகு...///
  தடம் பேட்டியைப் படிக்க வில்லை.. உண்மையில் அப்படியிருந்தாலும் ஏதோ பிழை உள்ளது.. ஜெமோவை JUST LIKE THAT எடுத்துக் கொள்ளும் உங்கள் அரசியல் எனக்குப் புரிந்தாலும் எனக்கு உடன்பாடில்லை...

  ReplyDelete