Sunday, August 7, 2016

அவர்கள் சமூக விரோதிகள்தான் மோடி. நீங்கள்தானே ???????
காலைல எழுந்தவுடனேயே  இப்படி அரிவாள தூக்க வைக்கிறீங்களே மோடி? 

பசு மாதா பாதுகாப்பு என்ற பெயரில் செயல்படுபவர்கள் எல்லாம் வெறும் சமூக விரோதிகள் என்று பொங்கி இருக்கிறீர்கள். அவர்கள் மீதெல்லாம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளீர்கள்.

அந்த சமூக விரோதிகள் எல்லாம் யார்?

உங்கள் கட்சிக் காரர்கள், உங்கள் குருபீடம் ஆர்.எஸ்.எஸ் காரர்கள். உங்களால் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? இல்லை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வார்த்தை உங்களது உள்ளத்தில் இருந்து வந்ததா? 

வெறியூட்டும் பேச்சுக்களை பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னீர்கள். என்ன கிழித்தீர்கள். அத்தனை வெறியர்களும் அன்றாடம் விஷம் கக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

அவர்கள் சமூக விரோதிகள்தான். அந்த சமூக விரோதிகளின் கூட்டத்தின் தலைவரே நீங்கள்தானே.

உங்கள் கண்ணசைவில்தான் அத்தனை அயோக்கியத்தனமும் அரங்கேறுகிறது என்பது அனைவருக்கும் தெரியும் என்பது உங்களுக்கும் தெரியும். பிறகு எதற்கு இந்த உத்தமர் வேடம்? உங்களின் கள்ள மௌனத்தை விட இந்த வாய்ச்சவடால் படிப்பு இன்னும் அசிங்கமாக, அறுவெறுப்பாக இருக்கிறது. 

இந்தியாவை அழித்தொழிப்பது என்பதுதான் உங்கள் கொள்ளைக் கூட்டத்தின் செயல் திட்டம். முடிந்தால் எங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்கிறோம். இல்லையேல் மாண்டு போகிறோம். 

இந்த உத்தம வேஷம் போடுவதை விட்டு விட்டு வழக்கம் போல் வெளிநாடு போய் விடுங்கள். ஓபாமாவுக்கு இன்னும் மூன்று மாதம்தான் பதவிக்காலம். போய் அவரோடு காலத்தை கழித்து விட்டு அது பற்றி கதை சொல்லுங்கள். நல்லவன் வேடம் எல்லாம் உங்களுக்கு பொருந்தாது. திரைப்படங்களில் வேண்டுமானால் வில்லன் வேடத்தில் நடித்தவர்களுக்கு கதாநாயகனாகும் வாய்ப்பு கிடைக்கலாம்.

நீங்கள் என்றுமே வில்லன்தான்.

8 comments:

 1. வில்லன் மோடி - பதிவை விட படம் சூப்பர்

  ReplyDelete
 2. அவர் நமது பாரதத்தின் பிரதமர். உங்களுடைய பிரதமரும் அவர்தான். இப்படி தரக்குறைவாக வில்லன் என்று சொல்வது சரியல்ல. மோடிஜியால் மட்டுமே இந்தியாவை வல்லரசாக மாற்ற முடியும்

  ReplyDelete
  Replies
  1. try your best to cheat yourself.Still you trust him?

   Delete
  2. மோடிஜியை தரக்குறைவாக ஒன்றும் நான் எழுதவில்லை. உண்மையைச் சொன்னேன். அது தரக்குறைவாக இருந்தால் அதற்கு காரணம் நான் அல்ல. மோடிதான். நீங்கள் காவிக் கூட்டமாக இருந்தால் சரி, மோடியை ஆதரிக்க வேண்டியது உங்கள் கடமை. இல்லையென்றால் உங்களுக்காக வருந்துகிறேன். மூட நம்பிக்கை நல்லதல்ல

   Delete
 3. இந்தியா வல்லரசாக முதல் தேவை...ஒவ்வொரு குடிமகனுக்கும் [protected] குடி தண்ணீர் மற்றும் வீட்டில் ஒரு கழிப்பறை. பிளஸ் 2 வரை இலவச படிப்பு!இதை முதலில் செய்ததும் பிறகு பேசுவோம்! ராணுவ தளவாடங்களில் காண்ட்ராக்ட்அடிக்க நாமா ஆட்கள் செய்யும் மூளைச்சளைவையே--வல்லரசு!

  ஜப்பான் கிட்டே இராணுவமே இல்லை. அது வல்லராசா?

  ReplyDelete
 4. Raman sir and நம்பள்கி well said

  ReplyDelete
 5. அப்புறம் மனிதன் மற்றொரு மனிதனின் மலத்தை அள்ளக் கூடாது. ரயில்கள் ஸ்டேஷனில் நிற்கும் போது கழிவறையை கண்டக்டர்கள் பூட்டி விடவேணும். ஒவ்வரு டிக்கெட்டிலும் ஐந்து ரூபாய் அதிகம் வாங்கி அதில் எல்லா ஸ்டேஷன்களிலும் கழிவறை கட்டனும். ரஜினி 1000 படத்திற்க்கு ரூபாய் கொடுத்து சினிமா போகிறவன் தான் கத்துவான்.
  இரண்டு வருடம் முன்பு திருவான்மியூர் தியாகராஜாவில் (பேர் ஏதோ வேற இப்போ!)_ இப்ப ஓர் டிக்கெட் ரூபாய். சின்ன தியேட்டர் நல்ல வசதியான இருக்கைகள். நல்ல சவுண்ட் சிஸ்டம். கழிவறைகள் அவ்வளவு சுத்தம்! மேலை நாடுகள் மாதிரி இருக்கு? எப்படி இவர்களால் 'இப்போ' மட்டும் முடிகிறது?

  ReplyDelete
 6. நம்பள்கி அவர்களே
  //ரஜினி 1000 படத்திற்க்கு ரூபாய் கொடுத்து சினிமா போகிறவன் தான் கத்துவான்.//
  வெளிநாட்டில் 7.50 அமெரிக்கன் டாலர் கட்ணம் செலுத்தி நல்ல சவுண்ட் சிஸ்டத்துடன்,சுத்தமான கழிவறை வசதிகளுடன் பல ஆங்கில படங்கள் பார்த்திருக்கேன்.நம்பள்கி.
  ரஞ்சித் எடுத்த படம் என்பதால் அதை வசதி மிக்க மக்கள் வாழும் நாடு இந்தியா என்று சொல்லி 20 டாலருக்கு விற்கபடுவதை என்னால் ஏற்க முடியாது
  ரஞ்சித் எடுத்த படம் என்பதால் என்னவித கொடுமைமையும் செய்யலாம் என்பதை நான் ஏற்கமாட்டேன்.

  ReplyDelete