Friday, August 12, 2016

ஜெமோ – ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான்









ஜெய மோகனின் தடம் நேர்காணல் தொடர்பாக ஏற்கனவே இரண்டு பதிவுகள் எழுதியிருந்தேன். கடைசி பதிவில் தோழர் ச.தமிழ்ச்செல்வன், அவரது “ஜிந்தாபாத், ஜிந்தாபாத்” நூலில் தான் ஏன் அஞ்சலகப் பணியைத் துறந்தேன் என்று எழுதியிருந்ததை குறிப்பிட நினைத்தேன்.

அந்த கடைசி அத்தியாயம் முழுமையையும் பகிர்ந்து கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும் எனக் கருதியதால் அப்பதிவில் எழுதவில்லை.

நெகிழ்ச்சியும் எழுச்சியும் ஊட்டுகிற அந்த கொந்தளிப்பான தருணங்களை நீங்களும் படியுங்கள்.









தொலைபேசி வேலையை தான் ஏன் துறந்தேன் என்று இது போல ஜெயமோகனால் பெருமிதமாக ஏதேனும் சொல்ல முடியுமா?

எனக்கு மிகவும் பிடித்த “ஜிந்தாபாத், ஜிந்தாபாத்” நூலை மீண்டும் ஒரு முறை முழுமையாக படித்தேன்.

அப்போது  கிடைத்தது இந்த விஷயம்.






ஆக ஆரம்ப காலத்திலிருந்தே தவறாக தகவல்களால் அறைகுறையாக ஜெயமோகன் தன்னை தகவமைத்துக் (இது அவரது மொழி) கொண்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அவரால் நியாயமாகவே நடக்க முடியாது என்பது யதார்த்தம்.  

அவரு உளறிக்கொண்டே இருப்பாரு. நாம அடித்துக் கொண்டே இருப்போம்.

4 comments:

  1. திரு ராமன்.. நான் BSNL பணிபுரிகிறேன்.. ஏறத்தாழ 33 ஆண்டுகளாக.... உங்கள் தகவல் பிழை உள்ளது.. உங்களுக்கு ஜெமோ மேல் உள்ள கோபத்திற்கான பின்னணி புரிகிறது... ஆனால் எங்கள் நிறுவனத்தின் தொழிற்சங்க வரலாறு என்பது இந்தியாவே அரசியல்கட்சிகளே தோற்றுப் போகும் அளவு சிக்கல் மிகுந்தது.. அவற்றை முழுவதுமாக (தவறாக எண்ண வேண்டாம்) நிறுவனத்தில் பணிபுரிகிறவர்களுக்கே புரியாது.. நான் அந்தச் சிக்கலில் பல ஆண்டுகளாக மாட்டிக் கொண்டு தற்போதுதான் வெளி வந்திருக்கிறேன்.. ஜெமோ நாகர்கோவிலில் பணிபுரிந்தார்.. சில காலங்கள் CPM அனுதாபியாகவும் இருந்தார்... பிறகு குப்தா அணிக்கு வந்தார். அதைப் பற்றி விரிவாகப் பேசினால் நிறைய விஷயங்கள் விவாதிக்கவேண்டும்... ஆக அதற்காக மட்டும் (REPEAT) மட்டும் அவரை தாக்க வேண்டாம்.. அவரைத் தாக்க வேறு காரணங்கள் உங்களுக்கு உண்டு ( அதை நான் ஏற்காவிட்டாலும்)
    நன்றி
    பத்ரிநாத்

    ReplyDelete
    Replies
    1. அன்பான திரு பத்ரிநாத், முப்பது ஆண்டுகளாக தொழிற்சங்க இயக்கத்தில் பணி புரிகிறேன். வேலூர் வந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தோடு நெருக்கமாக இருக்கிறேன். அதனால் நீங்கள் சொல்லும் அரசியல் குறித்து நானும் அறிவேன். ஜெயமோகனை அவர் குப்தா அணி என்பதற்காக கண்டிப்பாக தாக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தற்போது ஜிந்தாபாத், ஜிந்தாபாத் படிக்கிற போதுதான் இந்த விஷயம் அழுத்தமாக தெரிந்தது. அவரது புரிதலில் உள்ள கோளாறை சுட்டிக்காட்டவே நூலின் அப்பகுதியை பகிர்ந்து கொண்டேன். அவரது ஆணவமான அணுகுமுறை, பெண்கள் மீதான் மோசமான பார்வை ஆகியவற்றை தாக்காமல் இருக்க முடியாது. இந்த இரண்டு விஷயங்களை நீங்கள் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

      Delete
  2. தசெல்வனின் ஜிந்தாபாத் நூலை படித்து நண்பர்களோடு பேசியிருக்கிறோம்.. அதை நினைவூட்டியதற்கு நன்றி ராமன்
    பத்ரிநாத்

    ReplyDelete
  3. Jeyamohan and etcetra are half-baked people. Don't give them to much attention! Better ignore these type of people!

    ReplyDelete