Wednesday, January 11, 2012

அவமானமே உன்னாலதானய்யா?





ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 40 % பேர் சத்துக்குறைவாக இருப்பது என்ற ஆய்வு முடிவு ஒரு தேசிய அவமானம் என்று மக்கள் நலப் பாதுகாவலன் மன்மோகன்சிங் வெடித்துள்ளார்.

மக்களின் ஏழ்மை நிலை அதிகரிக்க உலகமயமாக்கல் கொள்கை ஒரு காரணம். அதற்கு யாரய்யா காரணம்?

முப்பத்தி ரெண்டு ரூபாய்க்கு மேல் வருமானம் வந்தால் அவன் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவனாம். அவனுக்கு அரசு சலுகைகள் எதுவும் கிடையாதாம். இந்த வருமானம் உள்ளவன் வீட்டுக் குழந்தை எப்படி இருக்கும் என்று  தெரியாதா உமக்கு?

தலித் மற்றும் இஸ்லாமியக் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டதாக அறிக்கை  சொல்கின்றது.

இஸ்லாமிய மக்களின் வாழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளும் கொடுத்த நீதியரசர் ராஜேந்திர சச்சார் குழு அறிக்கையை கிடப்பில் போட்டது யாரய்யா?

எஸ்.சி/ எஸ்.டி சிறப்பு உட்கூறு திட்டம் கொண்டு வரப்பட்டு பல்லாண்டுகள் ஆன பின்பும் அதன் அமுலாக்கம் முறையாக அமுலாக இருப்பதைப் பற்றி அலட்சியப்படுத்துவது யாரய்யா? தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை காமன்வெல்த் ஊழல்களுக்கு திருப்பி விட்டது யாருடைய ஆட்சியில் ஐயா?

இந்தியாவின் தேசிய அவமானம் நீங்கள்தானே மிஸ்டர் மன்மோகன்சிங்

1 comment:

  1. எனக்கு உண்மையிலேயே ஒன்று புரியவில்லை. சுதந்திரம் அடைந்த பின் ஐம்பது வருடங்களுக்கு மேல் காங்கிரஸ் ஆட்சி தான். அதிலும் கடந்த ஏழு வருடங்களாக மன்மோகன் பிரதமராக இருக்கிறார். அப்படி இருக்கும்போது, அவமானம் என்றால் இவர்களுக்கு அல்லவா இருக்க வேண்டும்? எப்படி கூசாமல் இப்படி சொல்ல முடிகிறது இவரால்? இவர் மனிதரே இல்லை. இந்தியாவிற்கு வந்த வியாதி!

    ReplyDelete