Monday, January 16, 2012

தந்தை பெரியாருக்கு இப்படி ஒரு அவமானமா?



தந்தை பெரியாரை  வேறு யாரும் , ஏன்   ராம கோபாலன்
வகையறாக்கள்  கூட  இப்படி  அவமானப் படுத்திவிட முடியாது!

அப்படி ஒரு களங்கத்தை  ஜெயலலிதா செய்துள்ளார்.

தந்தை பெரியார் விருதை  விசாலாட்சி நெடுஞ்செழியனுக்கு 
அளித்துள்ளார். வாழ்நாள் முழுதும் மூட நம்பிக்கைக்கு எதிராக,
கடவுள் மறுப்பிலும்  பாடுபட்டவர் பெயரிலான விருது

மேல்மருவத்தூர்  பக்தர்கள் சங்க தலைவிக்கா?
தன்னையே கடவுளாகக் கூறிக் கொண்டு புதிய 
மூட நம்பிக்கைகளை உற்பத்தி செய்யும் கூட்டத்தில்
ஒருவருக்கு  பெரியார் விருதா?

ஜெ  செய்யும் இந்த இழிவுக்கு எதிராக குரல் கொடுப்போம்.
 

6 comments:

  1. மஞ்சள் பத்திரிகை நக்கீரன் கோபாலுக்கு - திராவிட கழக வீரமணி "பெரியார்" விருது கொடுத்த இழிவு தெரியுமா?

    பெரியார் விருது... சிறுமைப்படும் பெருமை.

    ReplyDelete
  2. வீரமணியே ஜெயலலிதாவுக்கு விருது கொடுத்திருக்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்குத்தான் விருது என்று இருக்கிறதா என்ன. விசாலாட்சி அம்மையார் அப்படி என்னதான் செய்து விட்டார் என்று கேள்வி கேட்கலாம் அது நியாயமாகப் படுகிறது.

    ReplyDelete
  3. தி.க வீரமணியே முன்பு ஜெயலலிதாவிற்கும் சமூக நீதி காத்த வீராங்கனை என்று விருது கொடுத்துள்ளார். தனி நபர்களோ, அமைப்புக்களோ அளிக்கும் விருதுகள் பற்றி பொருட்படுத்த வேண்டியதில்லை. அரசு விருது
    என்பதால்தான் கேள்வியே. தந்தை பெரியார் பெயரில்
    விருது என்கிற போது கொஞ்சமாவது அவர் கொள்கைகளுக்கு பொருத்தமாக உள்ளவர் என்பதை
    பார்க்க வேண்டும்

    ReplyDelete
  4. அண்ணாதுரைக்கு அடுத்த இடத்திலிருந்த நடமாடும் பல்கலைகழகம் என அழைக்கப்பட்ட தன்மானதென்றல் நெடுஞ்செழியனை உதிர்ந்த ரோமம் என்று தான் அழைத்ததற்கு பிராயசித்தமாக இந்த விருதை அவர்தம் மனைவிக்கு புரட்ச்சிதலைவிஅம்மா கொடுக்கிறார்போலும்

    ReplyDelete
  5. ஜெயா யார் ராமகோபால வகையறாக்களின் தானை தலைவி தானே அவரிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்

    ReplyDelete
  6. Thozhar varum thalaimurai Thanthai periyar kadavul enru koorinalum aacharyam illai

    ReplyDelete