Monday, January 9, 2012

மாட்டுக் கறி தின்பது இழி செயலா?



 மாட்டுக் கறி தின்னும் மாமி என ஜெயலலிதாவை நக்கலடித்து
நக்கீரன் கட்டுரை எழுதியதும், அதனால் அதிமுக குண்டர்கள் 
நக்கீரன் அலுவலகத்தை  தாக்கியதும் தமிழகத்தின் தலையாய
பிரச்சினை ஆகி விட்டது.



அப்படி மாட்டுக்கறி சாப்பிடும் பழக்கமே தனக்கு கிடையாது என
ஜெ சார்பில் பொன்னையன் நீண்ட விளக்கத்தை  ஜெயா டிவியில் 
தர, இல்லை இல்லை அவர் மாட்டுக்கறி சாப்பிடுபவர்தான் 
என்று முக நூலில் ஒரு படத்தை சிலர் வெளியிடுகின்றனர்.
அவர் சோபன்பாபுவிற்கு மாட்டுக்கறி பரிமாறுவது போன்ற
ஒரு படம் வெளியிடப்படுகின்றது. அதைப் பார்க்கும்போதே 
அது ஒரு உருவாக்கப்பட்ட படம் என்று நன்றாக தெரிகிறது.
ஆனாலும் சிலர் மாட்டிக்கொண்டார் ஜெ என்ற பாணியில் 
பின்னூட்டம் போடுகின்றனர்.


நக்கீரனின் செய்தியிலும் சரி, அதிமுக குண்டர்களின் 
தாக்குதலிலும் சரி ஒளிந்திருக்கிற உண்மை ஒன்றுதான்.


ஏதோ ஒரு மிகப் பெரிய இழி செயலை ஜெ செய்து விட்டார்
என்ற தோற்றத்தை உருவாக்குவதுதான் நக்கீரனின் நோக்கம்.
மலிவான விளம்பர உத்தி என்பதைத்தவிர அதில் வேறு
எதுவும் இல்லை. அவர் போட்ட தூண்டிலில் அதிமுக 
மீன் முட்டாள்தனமாக சிக்கிக் கொண்டு விட்டது. சகிப்புத் 
தன்மை சிறிதும் இல்லாதவர் என்பதை ஜெ மீண்டும் 
நிரூபித்து விட்டார்.


என் கேள்வி இவ்வளவு பெரிய சர்ச்சை உருவாக்குகிற 
பிரச்சினையா மாட்டுக் கறி சாப்பிடுவது?


அது ஒரு உணவுப் பழக்கம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விருப்பமான உணவு.
எதோ  அது ஒரு பாவச்செயல் போல செய்தி வெளியிட்டதில்
நக்கீரனின் சமூக நீதி முகமுடியும் கழண்டு போய் 
அம்பலப்பட்டு நிற்கிறது. அந்த   உணவை சாப்பிடும்
மக்களைத்தான்  நக்கீரன் இழிவு படுத்தியுள்ளது.


பல ஐரோப்பிய நாடுகளில் அதுதான் முக்கிய உணவு.
வேலூருக்கு வந்து பாருங்கள். பீப் பிரியாணி கடைகளில்
எவ்வளவு கூட்டமென்று!


ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மைக்கு இதுதான்
ஒரு நல்ல உதாரணம்.
 

 

1 comment:

  1. hi, in the name of press freedom and freedom of expression, nakkeeran wants to create unnecessary scene. Even if JJ eats beef, it is her choice of food, nothing wrong. Now-a-days Many brahmins are having the habbit of eating non-veg food. JJ is not the lone case. This had been published only with the intention of provoking aiadmk cadres and had been successful. These cadres think she is an avatar and donot take it as normal human's eating habbit.

    But this had helped people to forget real important issues for which we suffer... It is a pity that we have very short term memory.
    We fight for Koodankulam Reactor, it is sent back by Mullai Periyar Dam Issue, by God's grace(?), thane cyclone made a complete sweep of people's normal life, property, possessions and more important - news channels made a day of it. So what next, nakkeeran hit stands with this Mami's Maattu Kari issue. People debate over this danda issue for some days. That's all!

    ReplyDelete