கிரிக்கெட் மீது பொதுவாக ஆர்வம் கிடையாது. அதுவும் ஐ.பி.எல், ஸ்பான்ஸர், பிராண்ட் அம்பாசடர், விளம்பரங்கள், சூதாட்டங்கள் என கிரிக்கெட் ஒரு வணிகமாகவும் அதனால் மற்ற விளையாட்டுக்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதாலும் கிரிக்கெட் மீதே ஒரு வெறுப்பு வந்து அதைப் பற்றிய செய்திகளைக் கூட சீண்டுவதில்லை.
இன்று மதியம் உணவு இடைவேளியில் தோழர்கள் பேசிய போது கிடைத்த தகவல் இந்தப் பதிவை எழுத தூண்டியது. இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே நடக்கும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் க்ளார்க் முன்னூற்றி இருபத்தி எட்டு ரன்களைக் கடந்ததும் டிக்ளேர் செய்து விட்டார். இதே போன்ற நிலையில் முன்பு மார்க் டெய்லர் தொடர்ந்து விளையாடாமல் டிக்ளேர் செய்து விட்டார்கள்.
கிரிக்கெட் உலகின் பிதாமகன் எனக் கருதப்படுகின்ற டொனால்ட் பிராட்மேன் ஆஸ்திரேலிய மண்ணில் படைத்த சாதனையை ஆஸ்திரேலிய வீரர்கள் யாரும் முறியடிக்க விரும்பவில்லை. ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன் குவித்த ஆஸ்திரேலிய வீரராக பிராட்மேனே நீடிக்க வேண்டும் என்பதால் வாய்ப்பு இருந்தும் ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த சாதனையை தாண்டுவதில்லையாம்.
இது சரியா, தவறா என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் சொல்லுங்கள். ஆனால் பிராட்மேன் உயிரோடு இருந்தால் இதை விரும்ப மாட்டார் என்பது வேறு விஷயம்.அதே போல் இந்த ஆட்டத்தில் கிளார்க் தொடர்ந்து விளையாடி இருந்தால் மைக்கேல் ஹஸ்ஸி, லாரா
ஆகியோரின் சாதனைகளை முறியடித்திருக்கலாம். ஆனால் அணியின்
வெற்றி வாய்ப்பு குறைந்து மேட்ச் சமமாகும் வாய்ப்பு வந்திருக்கும்.
வெற்றிக்கு முன்னுரிமை அளித்ததால் சாதனை பின்னுக்கு
போய் விட்டது.
ஆனால் அதே சமயம் இந்திய வீரர்கள் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்திய வீரர்கள் பலரும் கூட பல சாதனைகள் படைத்து உள்ளனர். ஆனால் பல முறை அந்த சாதனைகள் படைக்கப்பட்ட தருணங்களில் எல்லாம், இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. கவாஸ்கர் முதல் சச்சின் வரை எல்லோருக்கும் இந்த பெருமை உண்டு.
ஐ.பி.எல் போட்டிகள், பார்ட்டிகள், விளம்பரங்கள், அதனால் வரும் வருமானத்திற்கு வரி விலக்கு பெறுவது என்று இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பல முக்கியமான பணிகள் உள்ளது. அவை எல்லாம் இல்லாத நேரத்தில் தேசத்தின் வெற்றிக்காக விளையாடுவது பற்றி கண்டிப்பாக யோசிப்பார்கள். என்ன அந்த பொன்னான தருணம் எப்போதாவதுதான் வரும்!
Totally agreed.
ReplyDeleteSuch a huge hype for Cricket is totally unwarranted and undeserved. I read somewhere - 3Cs spoiling India are Corruption, Congress and Cricket.
Totally agreed.
ReplyDeleteSuch a huge hype for Cricket is totally unwarranted and undeserved. I read somewhere - 3Cs spoiling India are Corruption, Congress and Cricket.