யாஹூ இணையதளத்தில் ஒரு விவாதம். அடுத்த ஜனாதிபதி யாராக இருக்கலாம் என்று, பிரணாப் முகர்ஜி, ஹமீது அன்சாரி, கரன்சிங், சிவராஜ் படீல் என பல பெயர்களை அவர்கள் சொல்லியிருந்தாலும் வாசகர்களிடமிருந்து பெரும்பான்மையாக வந்திருந்த கருத்துத்தான் மலைக்க வைக்கிறது.
நீரா ராடியா அல்லது சோனியா காந்தியின் சகோதரிகளில் ஒருவர் என ஒருவர் கொளுத்திப் போட அது காற்றுத் தீயாய் பரவி, பலரும் அதையே வழி மொழிந்துள்ளனர். இந்திய மக்கள் எவ்வளவு தூரம் நக்கலும் நகைச்சுவை உணர்வும் கொண்டவர்கள், துன்பம் வரும் வேளையிலும் சிரிக்க வேண்டும் என்ற வள்ளுவனின் வாக்குப் படி நடப்பவர்கள் என்பதற்கு நீரா ராடியாவை ஜனாதிபதியாக முன்மொழிவதே ஒரு சான்று.
இந்த விவாதத்தில் ஆணாதிக்க உணர்வும் வெளிப்பட்டுள்ளது. கிரண் பேடி யின் பெயரை ஒருவர் முன்மொழிய அதை ஒருவர் உடனடியாக நிராகரிக்கிறார். அதற்கு சொல்லும் காரணம்தான் கொடுமை. பேன்ட் போட்ட அந்த பெண்மணி தேவையில்லை. ஆணைப் போல உடை அணிவதையே பாவம் சிலரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு
வேளை கிரண் பேடி புடவை கட்டினால் அந்த அதி மேதாவி அவரை
ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்வார் போலும்!
சரி, யார் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும்? நீங்கள் சொல்லுங்களேன். நான் நாளை விரிவாக எழுதுகின்றேன்
http://vennirairavugal.blogspot.com/காவல் கோட்டம் என்ற பிரதியை முன்வைத்து உயிர்மை இன் பொருமல்
ReplyDeleteHow can u believe Nira Radia to be humble and obedient to Sonia (like Prathibha Patil), sorry!
ReplyDeleteNira is business women, and she will ask for good share of power (read paisa) than Paattimma and Annai won't accept. Verea yaaravadhu ilichhavaikkarangala parthu sollunga.