"கோ" திரைப்படத்தில் ஒரு காட்சியில் காரில் வரும் முதலமைச்சர் பிரகாஷ்ராஜ், பேட்டியெடுக்கும் கார்த்திகாவிடம் கடுப்படித்தபடி சாலையில் இறங்கி நடக்கத் தொடங்குவார். மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் உருவாகும். "என் கெத்தை பாத்தியா, மக்கள் மத்தியில எனக்கு இருக்கிற மரியாதையை கவனிச்சியா" என்ற படி மீண்டும் காரில் உட்கார்ந்து கொள்வார்.
அது திரைப்படக் காட்சி.
அந்த காட்சியை இன்று காப்பியடித்தார் தமிழக ரத்துக் கழகத்தின் தலைவர் விஜய்.
திடீரென (முன் கூட்டியே திட்டமிட்ட படி) சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து விட்டார்.
கேரவனில் போனாலே பின்னால் தொடரும் மூட ரசிகர்கள் கூட்டம் சைக்கிளில் போனால் சும்மா விடுமா?
விபத்துக்களும் நெரிசல் மரணங்களும் நடப்பதற்கான வாய்ப்புக்கள் தோன்றினாலும் அதிர்ஷ்டவசமாக எதுவும் நடக்கவில்லை.
சினிமா சீன் போல கிறுக்குத்தனம் செய்த விஜயின் சைக்கிள் பயணம், அவரது தற்குறிகளில் ஒருவர் பட்டாசு கொளுத்துப் போக அவர் பயந்து போய் கேரவனில் ஏற நிறைவுக்கு வந்தது.
துரதிர்ஷ்டவசமாக ஏதாவது நடந்திருந்தால் தன் கிறுக்குத்தனத்தை மூடி மறைக்க திமுக மீது பழி போட்டிருப்பார் விஜய்.
தமிழ்நாட்டு அரசியலின் துயரம் விஜய்


No comments:
Post a Comment