Friday, April 17, 2026

எல்.முருகன் எங்கே அமித்ஷா??????

 


மோடியின் தொகுதி மறுசீரமைப்பு மோசடி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி தோழர் சு.வெங்கடேசன், எப்போதும் போல ஒரு அழுத்தமான உரையை அற்புதமாக நிகழ்த்தியுள்ளார். 

அந்த உரையின் காணொளி கீழே உள்ளது.


வலதுசாரிகள் எப்போதுமே பெண்களை பணயம் வைக்கிறார்கள் என்று திரௌபதியை உதாரணம் காண்பித்ததை ஆளும் கட்சியினராலும் தாங்க முடியவில்லை. அவைத்தலைவர் பொறுப்பில் இருந்தவராலும் முடியவில்லை. முழுமையாக பேசும் முன்பே முடிக்க வைத்து விட்டார்கள்.

ஆவேசமான உரையில் அவர் ஒரு கேள்வி கேட்டார்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எல்.முருகன் எங்கே?

தோற்றுப் போவதற்காக ஏன் அவர் பிரச்சாரம் செய்கிறார்?

ஆமாம் மோடி, எல்.முருகன் தோற்றுப் போனாலும் அமைச்சராக தொடர்வாரா? 

No comments:

Post a Comment