"நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க, இன்னிக்கு நீங்களும் என்னை மாதிரியே மாறிட்டீங்க, நான் செஞ்ச தவறிலயே பெரிய தவறு இதுதான்"
உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் குளத்தில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற ஊரின் முடிவை நிறைவேற்ற குளத்திற்குள் இறங்கும் முன்பு விஜயன் பேசும் வசனம் அது.
மகளிர் இட ஒதுக்கீடு வேணும்னு கேட்டுக்கிட்டு இருந்த உங்க எல்லாரையும் இன்னிக்கு மகளிர் இட ஒதுக்கீடு வேண்டாம்னு சொல்ல வச்சுட்யேன். நான் செஞ்சதுலயே மிகப் பெரிய சாதனை இதுதான்.
-இதுதான் மோடியின் மனதில் ஓடும் வசனமாக இருக்கும்.
நாளை மோடி கொண்டு வரப்போகும் மசோதாவால் தொகுதி எண்ணிக்கைகள் எப்படி மாறும் என்பதை கீழே உள்ள பட்டியல் உணர்த்தும்.
இப்போதுள்ள 545 என்ற எண்ணிக்கையின் விகிதத்தின் படி 850 ற்கு உயர்த்தினால் 203 இடங்களை பெற வேண்டிய தென்னிந்திய மாநிலங்கள் 166 இடங்களை பெறுவதும் 313 இடங்களை பெற வேண்டிய இந்தி பேசும் வட மாநிலங்களான உபி,மபி, பீகார், குஜராத், ராஜஸ்தான் 367 இடங்களை பெறும். இதை மோசடி என்றழைக்காமல் வேறென்ன சொல்வது?
இதனை கண்டிப்பாக முறியடிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி என்ன செய்யப் போகிறது?
அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டம் பற்றி நான் கடந்த ஒரு வாரமாகச் சொல்லி வரும் அச்சம் இன்று நிரூபணமாகியிருக்கிறது
மக்களவையில் தமிழ்நாட்டின் எண்ணிக்கை தற்போது 39. இது 58 ஆக உயரும் என்று சொன்னார்கள். இது வெறும் மாயை என்று நான் சொன்னேன்
தொகுதி மறுவரையறை செய்யும் போது 58 என்பது 46 ஆக குறையும்
அதே நேரத்தில், உத்தர பிரதேசத்தின் தற்போது எண்ணிக்கை 80. இது முதலில் 120 ஆக உயரும், தொகுதி மறுவரையறைக்குப் பின் சுமார் 140 ஆக மேலும் உயரும்
மக்கள் தொகையை நிலைப்படுத்திய 5 தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநித்துவம் 24.3%. இது குறைந்து 20.7% ஆகும்
மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும், ஒடுக்கப்படும்
அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை ஒற்றுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்
மேலே உள்ளது முன்னாள் ப.சிதம்பரம் சொன்னது. இவர் சொல் காங்கிரஸ் அம்பலம் ஏறுமா? பப்பு என்ற குற்றச்சாட்டை நிஜமாக்கிக் கொண்டிருக்கிற ராகுல் காந்தியும் அவரது ஆலோசகர்களான மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், ஜோதிமணி போன்ற பாஜக ஸ்லீப்பர் செல்களும் யோசிக்க விடுவார்களா?
மோடி செய்வது ஜனநாயகக் குற்றம் என்றால் அதை காங்கிரஸ் ஆதரித்தால் அது ஜனநாயகத் துரோகம்.
கடந்த கால அனுபவம் அந்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதை காங்கிரஸார்தான் போக்க வேண்டும்.
No comments:
Post a Comment