ஸ்டிக்கர் ஒட்டுவது என்ற கலாச்சாரம் சென்னை பெரு மழையின் போது ஏ1 ஜெயலலிதா ஆரம்பித்து வைத்தது.
திமுக அரசோ இல்லை வேறு எந்த மாநில அரசோ எந்த ஒரு புதிய மக்கள் நலத் திட்டத்தை அறிமுகம் செய்தாலும் அவர்கள் எங்களைப் பார்த்து காப்பி அடித்து விட்டார்கள், ஸ்டிக்கர் ஒட்டி விட்டார்க்ள் என்று கதை விடுவார்கள், மோடிக்கும், மோடி வகையறாக்களுக்கும் மக்கள் நலன் என்பதற்கும் ஸ்னானப் ப்ராப்தி கூட கிடையாது என்றாலும்.
அப்படி மற்றவர்களை ஸ்டிக்கர் பாய்ஸ் என்று சொல்பவர்கள் காப்பி அடித்த கதைதான் இந்த பதிவு.
ரஜினியும் கமலும் மீண்டும் இணையவுள்ள படத்திற்கான ப்ரோமா வீடியோ வைரலான ஒன்று.
அதை அப்படியே காப்பியடித்து கமலஹாசன், ரஜினிகாந்திற்கு பதிலாக பில்லா, ரங்கா கிரிமினல் கூட்டாளிகளை கொண்டு வந்துள்ளனர்.
மோடி சொல்லும் வளர்ச்சி என்பது இன்னும் வரவில்லை என்பதையும் அதற்கு இன்னும் 21 ஆண்டுகள் ஆகும் என்று தமிழ்நாடு பாஜகவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டது.
காப்பி காணொளியை தயாரித்தவர்கள் கொஞ்சம் புத்திசாலிகள். ஒரிஜினலில் வயதான ரஜினி, கமலைப் பார்த்து இளம் பெண்கள், அரைகுறை ஆடைகளோடு மெய்மறந்து பார்ப்பதாக, கொஞ்சம் கேவலமாகவே இருக்கும். காப்பியில் அதை வெட்டி விட்டார்கள். AI யில் தயார் செய்தபோது அந்த இளம் பெண்களைப் பார்த்து வயதானவர்கள் ஜொள்ளு விடுவது போல அவர்களின் உண்மையான குணாம்சத்திற்கு ஏற்ப வந்திருக்கும் போல! அதனால் வெட்டியிருப்பார்கள்.
ஒரிஜினல் காணொளியில் "யார் ஹீரோ?" என்ற கேள்வி வரும். இங்கே அந்த கேள்விக்கே இடமில்லை. அப்படிப்பட்ட கேள்வி வருமானால் கேட்டவர்களின் பதவி அவ்வளவுதான்.
பிகு: எழுதி ரொம்ப நாளாச்சிதான். இன்று கருப்பு சட்டை அணியும் நாள் அல்லவா! அதனால் அமித்ஷா கருப்பு சட்டை போட்ட படம் உள்ளதால் இன்று பகிர்ந்து விட்டேன்.
No comments:
Post a Comment