Tuesday, August 9, 2022

ரங்காராவிற்கு வராத நெஞ்சு வலி

 


ஐம்பதுகளின் இறுதியிலும் அறுபதுகளிலும் வந்த திரைப்படங்களில் எஸ்.வி.ரங்காராவின் கப்பல்கள் மூழ்கிப் போகும் அல்லது அவரது கோடோன் எரிந்து போகும். அதே நேரத்தில் அவர் இன்சூரன்ஸ் செய்திருந்த தனியார் பொது இன்சூரன்ஸ் கம்பெனியும் திவாலாகிப் போன செய்தியும் வரும். இதைக் கேட்டு முதலாளியாக நடிக்கும் திரு எஸ்.வி.ரங்காராவிற்கு நெஞ்சு வலி வந்து விடும்.

ஆனால் எழுபதுகளில் வந்த படங்களில் இது போன்ற காட்சியமைப்புக்கள் இருக்காது. ஏனென்றால் 1972 ல் பொது இன்சூரன்ஸ் துறை தேசியமயம் ஆக்கப்பட்டது. அதனால் திவாலும் கிடையாது. நெஞ்சு வலியும் கிடையாது. அதற்குப் பிறகு ரங்காராவிற்கோ, வேறு யாருக்கோ நெஞ்சு வலி வருவது போன்ற காட்சிகளே வைக்கவில்லை. 

அப்படிப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க மோடி அரசு திட்டமிடுகிறது.



 13-15 ஆகஸ்ட் 2022 ஆகிய நாட்களில் வேலூரில் நடைபெற உள்ள தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 35 வது பொது மாநாட்டினை முன்னிட்டு நேற்றும் இன்றும் பிரச்சாரப்பயணம் நடைபெறுகிறது. 

நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற பிரச்சாரப் பயண பொதுக் கூட்டத்தில் தென் மண்டல துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் பேசியதுதான் மேலே உள்ளது. 

No comments:

Post a Comment